ஹீரோவை விட ஹீரோயினுக்கு அதிக சம்பளம்... மூன்று முடிச்சு சீரியல் பிரபலங்களின் சம்பள விவரம் இதோ

Published : Nov 26, 2025, 09:19 AM IST

சன் டிவியில் சக்கைப்போடு போட்டு, டிஆர்பியிலும் முதலிடம் பிடித்து வரும் சீரியல் மூன்று முடிச்சு. இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இணையத்தில் கசிந்துள்ளது.

PREV
14
Moondru Mudichu Serial Actors Salary

சன் டிவியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் மூன்று முடிச்சு. இந்த சீரியலில் நாயகனாக நியாஸ் கான் நடிக்கிறார். அவர் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நந்தினி என்கிற கேரக்டரில் நடிகை ஸ்வாதி கொண்டே நடித்து வருகிறார். மேலும் இதில் ப்ரீத்தி சஞ்சீவ், கிரித்திகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். குறிப்பாக ப்ரீத்தி சஞ்சீவ், சுந்தரவள்ளி என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலை நந்தன் சி முத்தையா இயக்குகிறார். ஆர்.குமரன் திரைக்கதை அமைக்க, ப்ரியா தம்பி டயலாக் எழுதுகிறார்.

24
மூன்று முடிச்சு சீரியல்

சன் டிவியில் 350 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தான் தற்போது தமிழ்நாட்டின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது. டிஆர்பி ரேஸிலும் தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்து அசத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி யார்... யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

34
மூன்று முடிச்சு சீரியல் ஹீரோ- ஹீரோயின் சம்பளம்

அதன்படி மூன்று முடிச்சு சீரியலில் அதிக சம்பளம் வாங்குவது அதில் நாயகியாக நடித்து வரும் ஸ்வாதி கொண்டே தான். நந்தினி கேரக்டரில் நடிக்கும் அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.16 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. சொல்லப்போனால் இந்த சீரியல் ஹீரோ நியாஸ் கானைவிட ஸ்வாதிக்கு தான் சம்பளம் அதிகம். மூன்று முடிச்சு சீரியலில் நாயகனாக நடித்து வரும் நியாஸ் கான், ஒரு நாளைக்கு ரூ.14 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக, சுந்தரவள்ளி என்கிற வில்லி கேரக்டரில் நடிக்கும் ப்ரீத்தி சஞ்சீவ், ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

44
மூன்று முடிச்சு சீரியல் நட்சத்திரங்களின் சம்பளம்

சூர்யாவின் fiance அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த தர்ஷனா ஸ்ரீபால் கொலேச்சா ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கி இருக்கிறார். அதேபோல் இந்த சீரியலின் மற்றொரு வில்லியாக மாதவி கேரக்டரில் நடித்து வரும் கிருத்திகா லட்டுவுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறதாம். சூர்யாவின் தந்தையாக அருணாச்சலம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபாகரன் சந்திரனுக்கு ஒரு நாளைக்கு ரூ.9 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். மேலும் நந்தினியின் தோழியாக விஜி என்கிற கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதி சண்முகப்பிரியாவும் ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம்.

Read more Photos on
click me!

Recommended Stories