மீனா வீட்டைவிட்டு போனதுக்கு அப்புறம் தான் தங்கள் வீடு நல்லா இருப்பதாக கூறும் விஜயா, இவ ஜாலியா ஊரை சுத்திகிட்டு இருக்கா. இப்படி ஊர் சுத்துறதுக்கு தான் வீட்டை விட்டு போனியா என கேட்கிறார். என்ன பிரச்சனை என பார்வதி கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லிவிட்டு கிளம்புகிறார் மீனா. அவரிடம், போடி போ, இந்த நாடகமெல்லாம் எத்தனை நாளைக்குனு நானும் பாக்குறேன். எனக்கு எதாச்சும் நல்லது செய்யனும்னு நினைச்சா திரும்ப வீட்டுக்கு வந்திராத என திட்டி அனுப்புகிறார் விஜயா.
இதையடுத்து விஜயாவை தனியாக அழைத்து பேசும் சிந்தாமணி, தான் மீனாவையும் முத்துவையும் தனக்கு தெரிந்த ஒரு சாமியார் வீட்டில் பார்த்ததாக கூறுகிறார். அந்த சாமியார் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், அவங்க ஆவிகிட்டலாம் பேசுவாங்க எனவும் கூறுகிறார். ஒருவேளை மீனா உடம்பில் ஆவி எதாவது புகுந்திருக்குமோ என கொளுத்திப்போடுகிறார் சிந்தாமணி. இதைக்கேட்ட விஜயா, என்னது ஆவியா என ஷாக் ஆகிறார்.