எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தி நம்முடைய ரத்தம் இல்லை என்று கதிர் மற்றும் ஞானத்திடம் ஆதி குணசேகரன் கூறி இருக்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், விசாலாட்சி வீட்டுக்கு வந்ததும் அறிவுக்கரசி செய்யும் சதி வேலைகள் அனைத்தையும் நந்தினி கூறுகிறார். இதையடுத்து விசாலாட்சியே அறிவுக்கரசிக்கு எதிராக திரும்புகிறார். அப்போது அறிவுக்கரசியை வீட்டை விட்டு வெளியே போ என தர்ஷினி பிடித்து தள்ள, உடனே அருவாமனையை எடுத்து வந்து அனைவரையும் வெட்டி விடுவேன் என மிரட்டிய அறிவுக்கரசி, ஜனனி இன்னும் மூன்று நாட்களில் செத்துவிடுவாள் என்று ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். இதைக்கேட்டு அனைவரும் பதறிப் போகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஜனனியை மிரட்டும் ராமசாமி மெய்யப்பன்
தன் தம்பிகளுடன் வெளியே சென்றிருக்கும் ஆதி குணசேகரன், ராமசாமி மெய்யப்பனுக்கு போன் போட்டு, ஜனனிக்கு கால் பண்ணி, வீட்டில் இருக்கும் அவளுடன் அக்காக்கள் எதாச்சும் செய்தால் உடனே சக்தியை முடிச்சி விட்ருவேன்னு மிரட்டச் சொல்கிறார். அவரின் பேச்சைக் கேட்டு ஜனனிக்கு போன் போடும் ராமசாமி, நான் போனை வச்ச உடனே உன்னுடைய அக்காக்களுக்கு போன் பண்ணி, நீங்க வீட்டில் எதுவும் பிரச்சனை பண்ணிவிடாதீர்கள். நீங்க எதாச்சும் செஞ்சா சக்திக்கு தான் ஆபத்துனு சொல்லி எமோஷனலாக பேசச் சொல்கிறார். எதுக்கு அப்படி சொல்லனும் என ஜனனி கேட்டதும், சக்தியை அடிக்கிறார் ராம்சாமி. அவர் வலியால் துடிப்பதை போனில் கேட்டதும் தான் அப்படியே சொல்வதாக கூறுகிறார் ஜனனி.
34
ஆதி குணசேகரன் உடைக்கும் உண்மை
பின்னர் கோவிலில் முகாமிட்டுள்ள ஆதி குணசேகரனிடம் அவருடைய தம்பி ஞானம், நம்ம ரத்தம்னு சொல்றீங்க. அப்பறம் ஏன் அவனை கொலை பண்ண பிளான் பண்றீங்க என கேட்கிறார். அதற்கு ஆதி குணசேகரன், நான் திரும்பவும் சொல்றேன். நம்ம ரத்தத்தை நான் எதுவும் செய்ய மாட்டேன் என கூறுகிறார். இதனால் குழம்பிப் போகும் ஞானம் மற்றும் கதிருக்கு, அப்போ சக்தி நம்ம ரத்தம் இல்லையா என்கிற டவுட் வருகிறது. முன்னதாக பிளாஷ்பேக் காட்சியின் போதே தேவகியிடம் தன்னுடைய தந்தை ஆதி முத்துவுக்கு தான் மூத்த மகன் என்றும், தனக்கு இரண்டு தம்பிகள் இருப்பதாகவும் கூறி இருந்தார் குணசேகரன்.
இதனால் சக்தி யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது? ஒருவேளை சக்தி தான் தேவகியின் மகன் ராணாவாக இருப்பாரா என்கிற சந்தேகமும் எழத் தொடங்கி உள்ளது? சக்தியை ஜனனி காப்பாற்றினால் வீட்டில் ஆதி குணசேகரன் என்னென்ன களேபரம் செய்யப்போகிறார்? தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் வீட்டில் வைத்தே திருமணம் செய்து வைக்க அறிவுக்கரசி போடும் பிளான் திட்டமிட்டபடி நடக்குமா? ஜனனி வீட்டிற்கு வந்தபின் அறிவுக்கரசியை அடித்து விரட்டுவாரா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.