Siragadikka Aasai : பைனான்சியருக்கு ஆப்பு... வீட்டை மீட்க முத்துவுக்கு கிடைத்த புது ரூட்

Published : May 15, 2026, 08:55 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புக்கு சென்றதன் மூலம் அவருக்கு ஒரு நண்பர் கிடைத்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடன் காரணமாக வீடு ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். விஜயா வசதிக்கு ஆசைப்பட்டு ஸ்ருதி அம்மா வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறி, மனோஜின் ஷோரூமில் வந்து தங்கி இருக்கிறார். அவர் மனோஜ் ஷோரூமிற்கு வந்த தகவல் அறிந்து முத்துவும், மீனாவும் அவரை சந்தித்து தங்கள் வீட்டுக்கு வருமாறு கூப்பிடுகிறார்கள். ஆனால் விஜயா வர மறுத்துவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : விஜயாவுக்காக ஷோரூமை மூடிய மனோஜ்; அண்ணாமலையால் காத்திருக்கும் ட்விஸ்ட்

25
மனம் இறங்கும் விஜயா

விஜயாவை தான் அழைத்தால் மீனா அம்மா வீட்டிற்கு வந்துவிடுவார் என யோசித்து, அண்ணாமலையே நேராக மனோஜ் ஷோரூமிற்கு சென்று விஜயாவை கூப்பிடுகிறார். அவர் முதலில் வரமாட்டேன் என மறுத்தாலும், பின்னர் மனோஜும் இங்கு நீங்கள் இருந்தால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. இங்கு உங்களுக்கு போதிய வசதி இல்லை. அதுமட்டுமில்லாமல் கடையையும் திறக்க முடியவில்லை என சொன்னதை அடுத்து விஜயா மனம் மாறுகிறார். பின்னர் மீனாவின் அம்மா வீட்டிற்கு செல்ல சம்மதம் தெரிவிக்கிறார் விஜயா.

35
மீனா வீட்டில் விஜயா

முத்துவும், மீனாவும் விஜயாவை அழைத்துக் கொண்டு மீனாவின் அம்மா வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு போனதும் வழக்கம்போல் தன்னுடைய திமிர்தனத்தை காட்டுகிறார் விஜயா. எனக்கு இங்க வர விருப்பம் இல்லை. இவங்க எல்லாரும் சொன்னதுனால தான் நான் இங்க வந்தேன் என கூறுகிறார். அப்போது முத்து நீங்க இங்க நிம்மதியா இருக்கலாம் மம்மி என சொன்னதும். நீ என்னடா புதுசா மம்மினுலாம் கூப்பிடுற என விஜயா கேட்க, அப்போது முத்துவும், மீனாவும் தாங்கள் இருவரும் ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புக்கு செல்வதை சொல்கிறார்கள்.

45
மன்னிப்பு கேட்கும் ஸ்ருதி

இதையடுத்து ஸ்ருதியும், ரவியும் அங்கு வர, அப்போது ஸ்ருதி, தன்னுடைய அம்மா அப்படி செய்ததற்காக தான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என விஜயாவிடம் சொல்கிறார். மன்னிப்பு கேக்குற அளவுக்கு என்னதான் நடந்துச்சு என அண்ணாமலை கேட்க, முத்து எல்லா விஷயத்தையும் போட்டு உடைக்கிறார். இதைக்கேட்டதும் மீனாவின் அம்மா, சம்மந்தி வயசுல எவ்வளவு பெரியவங்க, அவங்களை இப்படி பண்ணலாமா என கேட்கிறார். இதையடுத்து முத்துவும், மீனாவும் கிளம்பி ஸ்போகன் இங்கிலிஷ் கிளாசுக்கு செல்கிறார்கள்.

55
முத்துவுக்கு கிடைத்த உதவி

அங்கு தான் முத்துவுக்கு ஒரு நண்பர் கிடைக்கிறார். அவர் முத்துவின் வீட்டு பிரச்சனையை பற்றி கேட்டு தெரிந்துகொண்டு, நான் உங்களுக்கு உதவுகிறேன் என சொல்கிறார். அப்படி நீங்க என்ன வேலை பாக்குறீங்க என முத்து கேட்க, நான் வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறேன் என சொல்கிறார். அதைக்கேட்டதும் ஷாக் ஆன முத்து, அப்போ என் வீட்டை மீட்டு கொடுத்திருவீங்களா சார் என கேட்க, அவரும், அந்த பைனான்சியரை நேரில் சென்று பார்த்து பேசுவோம் என சொல்லி இருக்கிறார். இதன்பின்னர் என்ன ஆகப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories