Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனும், அன்புக்கரசியும் ஒரே ரூமில் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி சொன்னதெல்லாம் பொய் என சொல்லி அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்ட ஈஸ்வரி, தன்னுடைய மகனுக்கு தன் கையால் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடுகளை செய்கிறார். மறுபுறம் ஜனனி, ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரங்களை கண்டுபிடித்து அவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார். அதேபோல் ஆதி குணசேகரனின் மகன் தர்ஷன், ராவணனின் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
தர்ஷனுக்கு அவசர அழைப்பு
தர்ஷன் - பார்கவியின் திருமணத்திற்காக பந்தக்கால் நடுவதற்கான பணிகள் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்க, அப்போது தர்ஷனுக்கு ஆபிஸில் இருந்து போன் வருகிறது. அன்புக்கரசி தான் தர்ஷனுக்கு போன் போட்டிருக்கிறார். அவர் கம்பெனியில் இருந்து அவசரமாக திருச்சி கிளம்ப வேண்டும், உடனே கம்பெனிக்கு வருமாறு சொல்கிறார். இதனால் தர்ஷனும் வேறு வழியின்றி அங்கு கிளம்பிப் போகிறார். மறுபுறம் தர்ஷனின் தந்தை ஆதி குணசேகரனும் வீட்டுக்கு வராமல் கோவிலிலேயே தஞ்சமடைந்திருக்கிறார். அவருக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
34
ஒரே ரூமில் தங்குகிறார்கள்
தர்ஷன் - அன்புக்கரசி உடன் கிளம்பி திருச்சிக்கு சென்றிருக்கிறார். அங்கு இரவில் ரூம் எடுத்து தங்குவதற்காக ஹோட்டலுக்கு செல்கிறார்கள். முதலில் இரண்டு ரூம் புக் பண்ணி இருந்த நிலையில், இருவர் வராததால், தற்போது தங்கள் இருவருக்கும் ஒரு ரூம் மட்டுமே போதும் என சொல்கிறார் அன்புக்கரசி. அதைக்கேட்டதும் தர்ஷன் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் வேறு வழியின்றி அவருடன் ஒரே ரூமில் தங்க சம்மதிக்கிறார். அங்குதான் மிகப்பெரிய ட்விஸ்டே காத்திருக்கிறது. அந்த ரூமில் கேமரா வைத்து இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை ராவணன், ஜனனிக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளது.
அந்த வீடியோவை மட்டும் ஜனனி ஈஸ்வரியிடம் காட்டினால் கட்டாயம் கல்யாணம் நின்றுபோகும். அதேபோல் தர்ஷன் - பார்கவி இடையேயும் சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராவணனின் முழு நோக்கமே ஆதி குணசேகரனின் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் என்பது தான். அதில் முதல் படியாக ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். அடுத்து தர்ஷன் - பார்கவியும் வெளியேற வாய்ப்பு உள்ளது. இதனால் குடும்பத்தில் மேலும் பிரச்சனை வெடிக்கும். ஆதி குணசேகரனும் வழக்கில் சிக்க வாய்ப்பு உள்ளது.