Siragadikka Aasai Serial Today Episode : விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தன்னுடைய ஷோரூமில் தங்கி இருப்பதால் கடையை திறக்காமல் லீவு விட்டுள்ளார் மனோஜ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இன்றைய எபிசோடில் குடும்ப உறவுகளுக்குள் நிலவும் மனக்கசப்புகள் மேலும் தீவிரமடையும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தன. விஜயாவை சமாதானப்படுத்த முயற்சிக்கும் குடும்பத்தினரின் போராட்டமும், அண்ணாமலையின் எதிர்பாராத செயலும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.
எபிசோடு தொடக்கத்தில், மனோஜ் தனது ஷோரூமிற்கு விடுமுறை எடுத்துவிட்டு, சந்தோஷ் மற்றும் ஜீவாவுடன் சேர்ந்து விஜயாவை கவனித்து வருகிறார். அந்த நேரத்தில் குளிக்க வெந்நீர் வேண்டும் என்று விஜயா கூற, மனோஜ் குக்கரில் தண்ணீர் சூடாக்கித் தரவா என கேட்பது விஜயாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், வீட்டை மீட்க முத்து மற்றும் மீனா முயற்சி எடுக்க வேண்டுமென நினைத்து, ஷோரூமிலேயே தங்க முடிவு செய்கிறார்.
25
கடும் கோபத்தில் அண்ணாமலை
இதற்கிடையில் அண்ணாமலைக்கு ஒரு ரியல் எஸ்டேட் முகவரிடமிருந்து அழைப்பு வருகிறது. புதிய இடம் வாங்க விருப்பமா என்று கேட்டபோது, “இருக்கிற வீடே கையில் இருந்து போகும் நிலைமை. இப்போது புதிய இடம் எதற்கு?” என்று கோபமாக பதிலளித்து போனை கட் பண்ணுகிறார். பின்னர் தனியாக வீட்டை நினைத்து கவலையுடன் இருக்கும் அண்ணாமலைக்கு, மீனாவின் அம்மா ஆறுதல் கூறுகிறார்.
மறுபக்கம், மீனா மற்றும் முத்து இருவரும் விஜயாவை வீட்டிற்கு வர அழைக்க செல்கின்றனர். ஆனால் விஜயா தொடர்ந்து பிடிவாதமாக பேசுகிறார். “உங்கள் வீட்டில் என்னால் தங்க முடியாது” என்று மறுத்தாலும், இருவரும் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.
35
விஜயாவை வீட்டுக்கு அழைக்கும் முத்து - மீனா
பின்னர் முத்துவும் மீனாவும் அண்ணாமலையிடம் விஜயா குறித்து பேசும்போது, “அவளுக்காக நான் ஏற்கனவே பல தியாகங்கள் செய்துவிட்டேன். இந்த முறை நான் முதலில் போய் அழைக்க மாட்டேன்” என்று உறுதியாக கூறுகிறார். இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று முத்துவும் மீனாவும் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், காய்ச்சலுடன் ஷோரூமில் அமர்ந்திருக்கும் விஜயாவை பார்க்க அண்ணாமலை நேரில் வருவது பெரிய திருப்பமாக அமைகிறது.
முன்னதாக தான் அழைக்க மாட்டேன் என்று கூறியிருந்த அண்ணாமலை அங்கே வந்திருப்பதை பார்த்த விஜயா உணர்ச்சிவசப்படுகிறார். அதன்பின், “சில நாட்களுக்கு மீனா வீட்டிற்கு வா” என்று அண்ணாமலை கூறுகிறார். ஆனால் அந்த வீட்டில் தங்க முடியாது என்று விஜயா மறுபடியும் தெரிவிக்கிறார்.
அந்த சமயத்தில் முத்து அங்கே வர, பின்னர் மீனாவும் வருகிறார். அண்ணாமலை ஏற்கனவே வந்திருப்பதை பார்த்து மீனா அதிர்ச்சி அடைகிறார். இருப்பினும், விஜயாவுக்கு வெளியே டீ குடிப்பது பிடிக்காது என்பதால் டீ வாங்கி வந்ததாக சமாளிக்கிறார்.
55
அடம்பிடிக்கும் விஜயா
இறுதியில், மனோஜ் தொடர்ந்து ஷோரூமை மூடி வைத்து விஜயாவுடன் இருப்பது அறிந்து அண்ணாமலை கடும் கோபம் கொள்கிறார். “இந்த கடைக்காகத்தான் கடன் வாங்கியிருக்கிறாய். இப்படி இருந்தால் பிசினஸும் பாதிக்கப்படும்” என்று திட்டுகிறார். அப்போது முத்து, “அம்மாவை வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டியது தானே?” என்று மனோஜிடம் கேட்க, “அம்மா மனசு உடைந்து போய்விடுமோ என்று சொல்லவில்லை” என அவர் பதிலளிக்கிறார். அந்த பதிலை கேட்ட விஜயா மனோஜை கடுமையாக முறைத்துப் பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அதன்பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.