ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்தவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்கிற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டும் ஆனது. சரவணன் மீனாட்சி தொடரின் வெற்றிக்கு அதில் ஜோடியாக நடித்த செந்தில் - ஸ்ரீஜாவின் கெமிஸ்ட்ரியும் ஒரு முக்கிய காரணம். இந்த ஜோடியை ஊரே கொண்டாடியது.
நாம் இருவரு நமக்கு இருவர் தொடருக்கு பின்னர் செந்தில் எந்த சீரியலில் நடிக்கப்போகிறார் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது குட் நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி விஜய் டிவிக்கு டாடா காட்டிவிட்டு ஜீ தமிழுக்கு தாவி இருக்கும் மிர்ச்சி செந்தில் அதில் புது சீரியல் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். இந்த சீரியல் பற்றிய தகவலும் தற்போது கசியத் தொடங்கி உள்ளது.
அதன்படி ஜீ தமிழில் மிர்ச்சி செந்தில் நடிக்க உள்ள புதிய தொடருக்கு அண்ணன் என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இந்த சீரியல் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறதாம். இதில் செந்திலுக்கு தங்கையாக ரித்திகா தமிழ் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் செந்திலுக்கு ஜோடியாக நித்யா ராம் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சரவணன் மீனாட்சி போல் இந்த சீரியலும் செந்திலுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... 'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத முக்கிய பிரபலம்? அப்செட்டில் ரசிகர்கள்!