இந்த நிலையில், பிரியங்கா நல்காரி ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பலரும் கூறி வந்த நிலையில், இதனை மறுத்துள்ள பிரியங்கா நல்காரி, சமீபத்தில் லைவ் ஒன்றில் பேசியபோது... தன்னுடைய திருமணம் குடும்பத்தினர் சம்மதத்துடன் தான் நடந்தது என்றும், இது ரகசிய திருமணம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் தன்னுடைய கணவரின் வீட்டில் தற்போது வரை தங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அவர்கள் ஏற்றுக்கொண்டவுடன் குடும்பத்தோடு இணைந்து இந்த சந்தோஷமான தருணத்தை கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.