ஆனந்த ராகம் என்கிற சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிகை ரிஹானாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் ரிஹானா, சமீபத்திய பேட்டி ஒன்றில் சமூக வலைதளங்களில் தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் குறித்து பேசியுள்ளார்.
இந்த நபரை சும்மா விடக்கூடாது எப்படியாவது மாட்டிவிட வேண்டும் என முடிவெடுத்த ரிஹானா. உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதைக்கேட்டதும் சுதாரித்துக் கொண்ட அந்த நபர் அதன் பின் ரிப்ளை செய்யாமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதுரை அந்த நபர் தன்னிடம் மாட்டவில்லை என ரிஹானா அந்த பேட்டியில் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி சீரியல் நடிகர் அர்னவ்வின் ரசிகர்கள் குறித்தும் பேசியிருந்தார் ரிஹானா.
சீரியல் நடிகர் அர்னவ் மற்றும் திவ்யா ஆகியோருக்கு இடையே பிரச்சனை நடந்தபோது அதுகுறித்து ரிஹானாவும் சமூக வலைதளங்களில் அர்னவ் பற்றி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். இப்படி பேசியதற்கு பின்னர் அர்னவ்வின் ரசிகர்கள் தன்னிடம் கொச்சையாக பேசியதாகவும், ரசிகர் என்கிற பெயரில் அவர்கள் மிகவும் கீழ்தரமாக நடந்துகொண்டதாகவும் ரிஹானா தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... "Life முன்னாடி மாதிரி இல்ல; இப்போ நிறைய மாறிட்டேன்" - சமந்தா!