ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவயா என்கிற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து இவர் தமிழிலும் தீயா வேலை செய்யனும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்திருந்தார்.
சினிமாவில் பெரியளவில் வரவேற்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் சென்ற பிரியங்கா நல்காரி, கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரோஜா என்கிற சீரியல் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார் பிரியங்கா.
ரோஜா சீரியல் முடிவுக்கு வந்த பின்னர் சீதா ராமன் என்கிற தொடரில் தற்போது நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. இந்த தொடருக்கும் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பிரபல வில்லி நடிகையான ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்துவருகிறார். இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.