பார்வதிக்கு விஜயா செய்த துரோகம்... முத்துவின் செயலால் முறிந்த நட்பு - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Dec 25, 2025, 08:59 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் செயலால் பார்வதியின் மகன் அவரை சந்தேகப்பட்டிருக்கிறான். இதனால் யோகா கிளாசில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் நெருங்கிய தோழியாக இருந்து வருபவர் தான் பார்வதி. இவரது வீட்டில் வைத்து தான் விஜயா யோகா கிளாஸ் எடுத்து வருகிறார். பார்வதியின் மகனும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டதால், உறவுகள் இன்றி தனியாக வசித்து வந்தார். அண்மையில் சிவன் என்பவருடன் பார்வதிக்கு நட்பு ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் பழகுவது விஜயாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர்களை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என முடிவு செய்த விஜயா, வெளிநாட்டில் இருக்கும் பார்வதியின் மகன் சித்தார்த்துக்கு போன் போட்டு பார்வதி - சிவன் பற்றி தவறாக சொல்லிவிடுகிறார்.

24
பார்வதியிடம் சண்டைபோடும் சித்தார்த்

இதையடுத்து திடீரென வெளிநாட்டில் இருந்து வந்த சித்தார்த், நேரடியாக வீட்டுக்கு வந்து பார்வதியிடம் சண்டைபோடுகிறார். அந்த சமயத்தில் மீனா, விஜயா, சிந்தாமணி ஆகியோரும் உடன் இருக்கிறார்கள். சித்தார்த் கோபத்துடன் சண்டை போடுவதை பார்த்து ஷாக் ஆன மீனா, உடனே முத்துவுக்கு போன் போட்டு வரச் சொல்கிறார். அதற்குள் சித்தார்த், சிவனிடம் சண்டை போடுகிறார். அதை தடுக்கும் பார்வதி மரியாதையா பேசு என சொல்கிறார். அதற்கு சித்தார்த், இந்த மாதிரி ஆளுங்க ஊருக்குள்ள நிறைய இருக்காங்க, தனியா இருக்குற லேடீஸை பார்த்து கவுக்குறது தான் இவங்க வேலை என சொல்கிறார்.

34
இதற்கெல்லாம் விஜயா தான் காரணமா?

அப்போது சித்தார்த்தை தடுத்து நிறுத்தும் பார்வதி, உனக்கு என்னடா பிரச்சனை என கேட்கிறார். அதற்கு அவர், உனக்கு அசிங்கமா இல்லையா, அப்படி என்ன இந்த வயசுக்கு மேல உனக்கு லவ் கேக்குது என சொன்னதும், பளார் என அறைவிடுகிறார் பார்வதி. என்னைப்பத்தி யாராவது தப்பா பேசுனா உடனே கிளம்பி வந்திடுவியா என பார்வதி கேட்க, யாரோ சொல்லி கேட்கல, இத்தனை வருஷம் உன்னுடைய பிரெண்டாக இருந்த விஜயா ஆண்டி சொல்லி தான் வந்தேன் என சொல்கிறார் சித்தார்த். இதன்பின்னர் இது விஜயா செய்த வேலை தானா என அனைவருக்கும் தெரியவருகிறது. பின்னர் முத்துவும் மீனாவும் விஜயாவிடம் ஏன் இப்படி பண்ணீங்க என சத்தம் போடுகிறார்கள்.

44
முறியும் பார்வதி - விஜயா நட்பு

ஓவராக பேசிய சித்தார்த்துக்கு முத்துவும் பளார் என அறைகிறார். பின்னர் அனைவரும் சென்ற நிலையில், விஜயாவிடம் பேசும் பார்வதி, இனி நீ எனக்கு பிரெண்டே கிடையாது, இனிமே இங்க வந்து யோகா கிளாஸ் எடுக்காத என சொல்கிறார். இதனால் மனமுடைந்து போகும் விஜயா, வீட்டுக்கு வந்து பெட்டில் படுத்து அழுகிறார். அண்ணாமலை என்ன ஆச்சு என கேட்டும் எதுவும் சொல்லாமல் இருக்க, பின்னர் அங்கு வரும் முத்து மற்றும் மீனா அனைத்து உண்மையையும் சொல்கிறார்கள். இதையடுத்து என்ன ஆனது? விஜயாவுக்கு வீட்டில் செம டோஸ் விழுந்ததா என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories