Karthik Master Plan Against Chamundeshwari Court Order Twist Highlights : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய 1070ஆவது எபிசோடிற்கான புரோமோ வீடியோவில் மாமியார் வீட்டிற்கு கார்த்திக் வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கார்த்திக் தீபம் சீரியலில் ரேவதி டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக டுவிஸ்ட் கொடுக்கும் வகையில் கார்த்திக் ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார். இது சாமுண்டீஸ்வரிக்கு ஹெப்பியாக இருந்தாலும், சந்திரகலாவிற்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. என்னடா இது நம்ம ரேவதியை வைத்து அவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பலாம் என்று பிளான் போட்டா அவன் ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறானே, இதில் ஏதும் உள்குத்து இருக்கா? என்று தனக்கு தானே பேசிக் கொண்டார். ஆனால், சாமுண்டீஸ்வரி சரி விடு எனக்கு இது சந்தோஷம் தான் என்று கூறி ரேவதியை விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்திட சொன்னார்.
25
Karthik sends Divorce Notice to Revathi
அவரும் அவரது அம்மாவின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட்டார். பிறகு எப்போது கோர்ட்டுக்கு வர வேண்டும் என்று கேட்க, நாளை காலை 10 மணிக்கு வர வேண்டும் என்று வழக்கறிஞர் கூறினார். இது நேற்று நடந்த எபிசோடு. இந்த நிலையில் தான் இன்றைய 1070ஆவது எபிசோடிற்கான புரோமோ வீடியோ வெளியானது. இதில், ரேவதி கோர்ட் காட்சிக்கு பிறகு எதுக்கும் கவலைப்படாதே. இவனை விட ஒரு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் கூறினார்.
35
Karthigai Deepam 6 Months Court Order Twist
இதற்கு என்ன பேசிக்கிட்டு இருக்க என்று ராஜராஜன் சாமுண்டீஸ்வரியை கேட்க, அதற்குள்ளாக ஒரு நிமிடம் என்று கார்த்திக்கின் குரல் கேட்கிறது. வீட்டு வாசலில் கார் நிற்க அது மீது சாய்ந்து கொண்டு சும்மா ஸ்டைலாக கார்த்திக் போஸ் கொடுத்துக் கொண்டு நிற்கிறார். அவரை நோக்கி சாமுண்டீஸ்வரி, சந்திரகலா, ராஜராஜன், மயில்வாகன், ரேவதி, ரோகிணி என்று எல்லோருமே செல்கின்றனர். அதற்கு சந்திரகலா மரியாதையாக போய்விடு இல்லையென்றால் போலீஸை வர வைத்து விரட்டியடிப்பேன் என்றார்.
45
கார்த்திகை தீபம் கார்த்திக் அதிரடி பிளான்
இதற்கு கோபமடைந்த கார்த்திக், ரேவதியை என்னுடன் அனுப்பி வையுங்கள். நான் அவளை கூட்டிக்கொண்டு செல்கிறேன். 6 மாசம் கழித்து வந்து திரும்ப கூட்டிக்கொண்டு போங்க என்று கொஞ்சம் ஸ்டைலாக சொல்கிறார். இதற்கு சாமுண்டீஸ்வரி மரியாதையாக போய்விடு. என்ன ரௌடித்தனம் பண்ணுறீயா. என்னுடைய துப்பாக்கிக்கு உன்னை பலி கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். அத்தை கோர்ட்டுல் என்ன சொன்னாங்க, நாங்க ரெண்டு பேரும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும் என்று சொல்லியிருக்காங்க. நான் அதற்காகத்தான் வந்திருக்கிறேன். நான் இங்க இருக்க கூடாது என்றால் ரேவதியை என்னுடன் அனுப்பி வையுங்கள். நான் அவளை என்னுடன் கூட்டிக் கொண்டு செல்கிறேன் என்று சொல்வதோடு அந்த புரோமோ வீடியோ முடிகிறது.
55
Chamundeshwari and Chandrakala Shocked
கார்த்திக்கின் இந்த வருகை சந்திரகலாவிற்கு மட்டுமின்றி காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோருக்கு ஒரு விதமான பீதியை ஏற்படுத்தியிருக்கும். இனி எப்படியாவது கார்த்திக்கை துரத்த வேண்டும் என்று தான் யோசித்து கொண்டிருப்பார். கார்த்திக் அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சந்திரகலாவிற்கு சிக்கல் தான். இதற்கு முன்னதாககூட உன்னை வீட்டை விட்டு வெளியில் துரத்திவிட்டேன் என்று சந்திரகலா பெருமிதம் கொண்டிருந்தார். கடைசி வரை கார்த்திக் சைலண்டாக இருந்தார். ஆனால், இப்போது கொஞ்சம் ருத்ரதாண்டவம் ஆட தொடங்கியிருக்கிறார். இனி வரும் எபிசோடுகளில் கார்த்திக்கின் ஒவ்வொரு பிளானும் எக்சிகியூட் ஆகும் என்று தெரிகிறது. சரி, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.