பழனிவேல் காந்திமதி ஸ்டோர்ஸ் கடையை திறந்த போது சரவணன் அவர் மீது சந்தேகப்பட்டு அவரை கடுமையாக பேசியிருந்தார். பாண்டியன் குடும்பத்தில் பழனிவேலுவிற்கு இருந்த ஒரே ஒரு ஆதரவு என்றால் அது கதிர் தான். அவர் மட்டுமே பழனிவேலுவை உண்மையாக நம்பினார்.
26
Palanivel emotional movements
பழனிவேல் கடை திறந்த போது தான் பிரச்சனை ஆரம்பித்த்து. உண்மையில் பழனிவேலுவிற்கு தெரியாமலேயே அவரது அண்ணன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் கடையை திறப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்தனர். அங்க சுத்தி இங்க சுத்தி கடையில் தனது தம்பி பழனிவேலுவை வைத்தே பாண்டியனை பழி தீர்த்துக் கொண்டனர். கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பாண்டியன் மற்றும் கோமதி பழனிவேலுவை வீட்டைவிட்டு துரத்தினர். மேலும், சகாத வார்த்தைகளை பேசி பழனிவேல் மனதை காயப்படுத்தினர்.
36
Pandian Stores 2 Serial episode highlights
குடும்பத்தில் உண்மையாக பாசம் வைத்திருந்தது என்னவோ பழனிவேல் தான். ஆனால், அவர் துரோகி, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக கூறி அவர் வெளியேற்றப்பட்டார். அப்படியிருந்தும் தனது அக்கா மகன் சரவணன் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று கருதி அவரை பார்க்க சென்றார். அப்போதும் கூட கோமதி பழனிவேலுவை அசிங்கப்படுத்தி வீட்டைவிட்டு துரத்திவிட்டார்.
46
Palanivel and Saravanan
இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் சரவணன் மற்றும் பழனிவேல் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 671ஆவது எபிசோடில் சரவணனுக்கு அவரது மாமன் பழனிவேல் ஆறுதல் சொல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.
56
Vijay TV Serial Pandian Stores 2 Serial update
பின்னர் சரவணனுக்கு போன் போட அவர் எடுக்கவில்லை. ஆனால், அவராகவே பழனிவேல் மாமாவை தேடி வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாமா என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்லி சரவணன் பழனிவேலுவை கட்டிப்பிடித்து அழுதார்.
66
Pandian Stores 2 Serial Today Episode
எனக்கு குழந்தை என்றால் ரொம்பவே பிடிக்கும். அதை சொல்லி ஏமாற்ற எப்படி அவர்களுக்கு மனசு வந்தது. தங்கமயில் தான் இப்படியெல்லாம் செய்யுமா என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்று பழனி சொல்ல, அவள் தான் ஒன்னா நம்பர் அக்யூஸ்ட் என்றார். மாமா என்னை மன்னித்துவிடு மாமா, உன்னை ரொம்பவே கஷ்ட்ப்படுத்தியிருக்கிறேன். நான், எதுவாக இருந்தாலும் முதலில் உன்னிடம் தான் சொல்வேன் என்று சொல்லி பழனிவேலுவை கஷ்டப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டார்.
பின்னர் கடையை அடைத்த பிறகு இரவு நாம் சந்தித்து பேசுவோம் மாமா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கடைக்கு வந்த சரவணன் தனது தம்பி கதிரிடம் நாம் ஈவ்னிங் வெளியில் போகலாமா? மாமாவிடம் சொல்லியிருக்கிறேன். ஈவ்னிங் சந்தித்து பேசலாம் என்று கூறியுள்ளார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.