
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் கிரிஸை காணவில்லை என்று ஒட்டு மொத்த குடும்பமும் பதறிப் போயிருந்த நிலையில் முத்து மற்றும் மனோஜ் இருவரும் கிரிஸை தேடும் வேலையில் ஈடுபட்டனர். பணத்திற்காக கிரிஷ் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அதன் பின்னணியின் வேறு ஏதோ இருப்பதாக முத்துவிற்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அதன்படி கடத்தல்காரன்களிடமிருந்து கிரிஷை பத்திரமாக காப்பாற்றி முத்து வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தார்.
என்னதான் முத்து காப்பாற்றியிருந்தாலும் கடத்தல் கும்பல் முதலில் போன் போட்டது மனோஜிற்கு தான். அது தான் ஏன் என்று தெரியவில்லை என்று முத்து குழப்பத்தில் இருந்தார். இதற்கு நான் பெரிய பிஸினஸ்மேன் என்று தெரிந்து கூட குழந்தையை கடத்தியிருக்கலாம் என்றார். மேலும், குடும்பத்தில் உள்ளவர்கள் அப்போது எதுக்கு ரூ.2 லட்சம் மட்டும் கேட்கவேண்டும். ரூ.50 லட்சம் கூட கேட்டிருக்கலாம் அல்லவா என்றனர். இதையும் எல்லோருமே சற்றி யோசித்தனர்.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் குழந்தையை கடத்தியவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து பத்திரமாக மீட்டு வருவது ஒருவராக இருந்தாலும் அதற்கான பேரும் புகழும் கிடைப்பது இன்னொருவருக்கா என்று கேட்கும் வகையில் காப்பாற்றியது முத்துவாக இருந்தாலும் புரோமோஷன் கிடைத்தது என்னவோ அருணுக்கா? என்பது போன்று இந்த காட்சி இருந்தது. அருண் வீட்டிற்கு வந்த இன்ஸ்பெக்டர் அவருக்கு மாலை அணிவித்து புரோமோஷன் கிடைத்த மகிழ்ச்சியான விஷயத்தை தெரியப்படுத்தி பாராட்டவும் செய்திருந்தார்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அருணுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த விஷயத்தை சத்யா, முத்துவிற்கு போன் போட்டு தெரியப்படுத்தினார். இதைத் தொடர்ந்து மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ரோகிணியின் உடம்பிற்குள் கிரிஷின் அம்மாவின் ஆவி வந்து, நீ தான் என்னுடைய மகனை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். அப்படி பார்த்துக் கொண்டால் உன்னுடைய மனைவி உடம்பை விட்டு நான் சென்றுவிடுவேன் என்று கிரிஷின் அம்மா கூறினார்.
விஜயா மற்றும் அவரது தோழியான பார்வதி பேசிக்கொண்டிருக்கும்போது இந்த பையன் வந்ததிலிருந்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அவனை பிடிக்கவே இல்லை என்று விஜயா கூட பார்வதி ஒரு சின்னப் பையனை எதிரி மாதிரி பாக்குறியே என்று அவருக்கு அறிவுரை சொன்னார் அதற்கு பிடிக்காத விஜயா நீ செய்யறது தான் இந்த ஊருக்கே தெரியுமே கதை எழுதுறேன் கதை எழுதுறேன்னு ஓவரா ஆடிட்டு இருக்க என்று பார்வதியை மனவேதனை அளிக்கும்படி கூறுகிறார் விஜயா அதற்கு பார்வதி என்ன இப்படி எல்லாம் பேசுற விஜயா என்று கேட்க நீ செய்றது தானே நான் சொன்னேன் என்று பார்வதியை மனவேதனை அளிக்கும்படி கூறுகிறார்.
அப்பொழுது மீனா வர என்ன ஆன்ட்டி இப்படி நிக்கிறீங்க என்று கேட்க விஜயா மனசு கஷ்டப்பட்டு பேசுறாங்க என்று கூட அத்தை எப்போதுமே இப்படித்தான் தெரியாதா ஆன்ட்டி என்று ஆறுதல் கூறுகிறார். அப்பொழுது கதை ஆசிரியரான சேவ் அங்கு வர பாரு கதையை நான் எழுதிட்டேன் பாரு என்று காட்டும் போது பார்வதியின் மகன் சீதா வெளிநாட்டில் இருந்து அம்மாவை பார்க்க கோபமாக வருகிறார்.
வாசித்தார் என்று பார்வதி வெளிநாட்டில் இருந்த வந்த மகனை கண்டு பாசமாக பேசுகிறார் நான் வந்தது உனக்கு சர்ப்ரைஸா இருக்கா இல்ல ஷாக்கா இருக்கா என்று கேட்கிறார் சீதா. ஏன்டா இப்படி எல்லாம் பேசுற என்று பார்வதி கேட்க இவர்தான் அந்த கதை ஆசிரியரா? லாஸ்ட்ல வந்து சப்ஸ்கிரைப் பண்ணுங்க என்று கூறுவாரே அவர்தான் இவரா என்னதான் நடக்கிறது இங்க என்று அதிரடியாக கேட்கிறார் சீதா அத்துடன் இந்த சீரியல் முடிந்தது என்ன நடக்கப் போகிறது என்று நாளை பார்க்கலாம்.