ஆடம்பரம்.. அலப்பறை இன்றி... சீரியல் நடிகை அனுவுக்கு சிம்பிளாக வளைகாப்பு நடத்திய கணவர் - வைரலாகும் போட்டோஸ்

First Published | Dec 22, 2022, 1:34 PM IST

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என யாரையும் அழைக்காமல் சிம்பிளாக நடந்து முடிந்த வளைகாப்பு குறித்து சீரியல் நடிகை அனு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அனு. இவர் பாண்டவர் இல்லம் சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த சீரியலில் இவர் ரோஷினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சமயத்தில் இவர் கர்ப்பமானதால், இவரது கதாபாத்திரத்தையே அவ்வாறு மாற்றியமைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்து வருகிறார் அனு.

நடிகை அனு, கடந்த 2017-ம் ஆண்டு விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பின் தற்போது அனு கர்ப்பமாகி உள்ளார். இத்தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க போகிறது. தற்போது 7 மாத கர்ப்பினியாக இருக்கும் அனுவுக்கு வளைகாப்பு நடைபெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்... திக்... திக்... நொடிக்கு நொடி திகில்..நயன்தாராவின் 'கனெக்ட்' கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமா? ட்விட்டர் ரிவ்யூ

Tap to resize

இந்த வளைகாப்பு அனுவுக்கு ஸ்பெஷலான ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் அவரது கணவர் மட்டுமே இந்த வளைகாப்பு நிகழ்வை நடத்தி உள்ளார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என யாரையும் அழைக்காமல் சிம்பிளாக நடந்து முடிந்த இந்த வளைகாப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அனு, சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், எனது வளைகாப்பு சிம்பிளாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என நானும் விக்கியும் விரும்பினோம். விக்கி தான் எனக்கு நலங்கு செய்தார். அந்த தருணம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. அப்போது புதுமணப் பெண் போல் என் முகம் சிவந்தது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அனுவின் வளைகாப்பு புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுத்தாரா விஷால்...! ‘லத்தி’ மிரட்டலா? சொதப்பலா? - டுவிட்டர் விமர்சனம் இதோ

Latest Videos

click me!