நயன்தாராவை போல் 37 வயதில் காதல் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

First Published | Dec 6, 2022, 11:28 AM IST

நயன்தாராவை போல் 37 வயதில் காதல் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நடிகை ஸ்வேதா பண்டேகர், சீரியலில் நடித்து பிரபலமானாலும், இவர் முதன்முதலில் நடித்தது திரைப்படத்தில் தான். அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த ஆழ்வார் படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் ஸ்வேதா. அப்படத்தில் நடிகர் அஜித்துக்கு தங்கையாக இவர் நடித்திருந்தார்.

இதையடுத்து வள்ளுவனும் வாசுகியும், நான் தான் பாலா, பூவா தலையா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகி சீரியலில் எண்ட்ரி கொடுத்தார் ஸ்வேதா.

Tap to resize

அந்த வகையில் இவர் முதன்முதலில் நடித்த சீரியல் மகள். அதில் சைடு ரோலில் நடித்திருந்தாலும், இவரை பேமஸ் ஆக்கியது சந்திரலேகா சீரியல் தான். அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஸ்வேதாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

இதையும் படியுங்கள்... வளைகாப்பு முடிந்த கையோடு சொகுசு கார் வாங்கிய சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்... அதன் விலை இத்தனை லட்சமா?

8 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய சந்திரலேகா சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. அந்த சீரியல் முடிந்ததால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, தான் திருமணம் செய்துகொள்ள உள்ள தகவலை சமீபத்தில் வெளியிட்டு அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஸ்வேதா.

இவர் பிரபல தொகுப்பாளரான மால் முருகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். நயன்தாராவை போல் 37 வயதில் காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்வேதா பண்டேகருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... ஓ2 முதல் கார்கி வரை... 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ் படங்கள் என்னென்ன?

Latest Videos

click me!