‘குக் வித் கோமாளி’ ரித்திகாவின் திருமண வரவேற்பில் குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்... பாலா மட்டும் மிஸ்ஸிங்..!

Published : Nov 28, 2022, 12:24 PM IST

விஜய் டிவி பிரபலங்களான அறந்தாங்கி நிஷா, புகழ், அசார், டிஎஸ்கே, ஷகீலா ஆகியோர் வேணு - ரித்திகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

PREV
16
‘குக் வித் கோமாளி’ ரித்திகாவின் திருமண வரவேற்பில் குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்... பாலா மட்டும் மிஸ்ஸிங்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரித்திகா தமிழ்செல்வி. குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்ட ரித்திகாவிற்கு அந்நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. 

26

இதையடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்த ரித்திகாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேணு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

36

வேணுவும் விஜய் டிவியில் எக்சிகியூடிவ் புரடியூசராக பணியாற்றி வந்தவர் ஆவார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, கடந்த வாரம் கோவிலில் எளிமையாக திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... காதல் கண்கட்டுதே...! கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடியின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ...

46

இந்த ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

56

குறிப்பாக விஜய் டிவி பிரபலங்களான அறந்தாங்கி நிஷா, புகழ், அசார், டிஎஸ்கே, ஷகீலா ஆகியோர் கலந்துகொண்டு வேணு - ரித்திகா தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

66

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலம் பாலா கலந்துகொள்ளவில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் பாலாவும், ரித்திகாவும் காதலிப்பதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அஜித் - ஷாலினி முதல் கவுதம் - மஞ்சிமா வரை! ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடி ஆன கோலிவுட் பிரபலங்களின் லிஸ்ட் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories