டிராக்டர் மோதியதில் பிரபல சீரியல் நடிகை பரிதாப பலி - சோகத்தில் ரசிகர்கள்

Published : Nov 14, 2022, 10:42 AM IST

டிராக்டர் மோதியதில் பைக்கில் சென்ற பிரபல சீரியல் நடிகை உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

PREV
14
டிராக்டர் மோதியதில் பிரபல சீரியல் நடிகை பரிதாப பலி - சோகத்தில் ரசிகர்கள்

மராத்தி மொழி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கல்யாணி குராலே ஜாதவ். 32 வயதாகும் இவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகை கல்யாணி கோல்ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஹலோண்டி என்கிற கிராமத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

24

கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஹோட்டலை மூடிவிட்டு நடிகை கல்யாணி தனது பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மீது கல்யாணி சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த கல்யாணியை மீட்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்கள்... நாமினேஷனில் சிக்காமல் நழுவிவந்த 3 பேரை கொத்தாக தட்டிதூக்கிய ஹவுஸ்மேட்ஸ்! இந்தவார பிக்பாஸ் எவிக்‌ஷன் லிஸ்ட் இதோ

34

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. கல்யாணியின் பைக்கின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். நடிகை கல்யாணியின் எதிர்பாரா மரணம் அவரது குடும்பத்தினரையும், சக நடிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

44

நடிகை கல்யாணியின் மறைவுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஆர்.ஆர்.ஆர் இரண்டாம் பாகம் வருமா? வராதா? - உண்மையை ஓப்பனாக போட்டுடைத்தை ராஜமவுலி

click me!

Recommended Stories