chandra lakshman : 40 வயதில் தாயான சீரியல் நடிகை..குவியும் வாழ்த்துக்கள்

Published : Oct 29, 2022, 03:10 PM IST

சந்திராவிற்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சந்திரா. 

PREV
15
 chandra lakshman : 40 வயதில் தாயான சீரியல் நடிகை..குவியும் வாழ்த்துக்கள்
Chandra Lakshman and Tosh Christy

கேரளாவை சேர்ந்த சந்திரா லட்சுமணன். மனசெல்லாம் என்னும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இதையடுத்து ஸ்ரீகாந்தியின் தங்கையாக இந்த படத்தில் தோன்றிய சந்திரா, பின்னர் ஏப்ரல் மாதத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டது.

25
Chandra Lakshman and Tosh Christy

மலையாள படங்களில் அறிமுகமான இவர் அங்கு முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். அதிக மலையாள படங்களில் துணை வேடங்களிலும் இவர் நடித்துள்ளார். பின்னர் தமிழில் ஆதிக்கம், தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் சந்திரா லட்சுமணன்.

35
Chandra Lakshman and Tosh Christy

இந்த படங்களைத் தொடர்ந்து பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாந்தம் என்னும் தொடர் மூலம் அறிமுகமான இவர். பின்னர் 2006 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் கங்காவாக நடித்து ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

45
Chandra Lakshman and Tosh Christy

தேவயானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த  இதை தொடர்ந்து வசந்தம், மகள், சொந்த பந்தம், பாசமலர் உள்ளிட்ட பல சன் டிவி சீரியல்களில் தோன்றியுள்ளார். அதோடு ஜீ தமிழ் சீரியலிலும் இவர் வந்துள்ளார்.  முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.

55
Chandra Lakshman and Tosh Christy

திருமணத்தின் போது இவருக்கு 38 வயது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலர்கள் சீரியல் நடிகராக திகழ்ந்து வருபவர் டோஸ் கிறிஸ்டியன். இந்த தம்பதிகள் சமீபத்தில் தங்களது அழகான புகைப்படங்களை வெளியிட்டு, விரைவில் வாரிசை எதிர்பார்த்து உள்ளதாக குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் சந்திராவிற்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சந்திரா. 

click me!

Recommended Stories