விஜய் டிவி பிரபலத்தை ரகசிய திருமணம் செய்துகொண்டார் குக் வித் கோமாளி ரித்திகா - வைரலாகும் போட்டோஸ்

First Published | Nov 20, 2022, 11:51 AM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை ரித்திகா, விஜய் டிவி பிரபலம் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிகம் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோக்களில் ‘குக் வித் கோமாளி’யும் ஒன்று. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பிக்பாஸுக்கு பின் அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான். இதனால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் தற்போது தமிழ்சினிமாவிலும் சின்னத்திரையிலும் கலக்கி வருகின்றனர்.

அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்தவர் ரித்திகா. இவர் பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது விஜய் டிவி சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார் ரித்திகா.

Tap to resize

குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும், பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக அம்ரிதா என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார் ரித்திகா. அவருக்கும் திருமணம் நடக்கப்போவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரித்திகா.

இதையும் படியுங்கள்... ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடி... ரத்த தானம் செய்த அருண் விஜய்..!

மிகவும் எளிய முறையில், கோவிலில் ரகசியமாக நடைபெற்ற இவரது திருமணத்தில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இவர் விஜய் டிவியில் கிரியேட்டிவ் புரடியூசராக பணியாற்றி வரும் வினு என்பவரை தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் காதல் திருமணம் என்று தான் கூறப்படுகிறது.

ரித்திகாவின் திருமண புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அப்போ மாப்பிள்ளை பாலா இல்லையா என கேட்டு வருகின்றனர். ஏனெனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் பாலாவும், ரித்திகாவும் சேர்ந்து ஜோடியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அதனால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக கருதி வந்த ரசிகர்கள் இவ்வாறு கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய சினேகா..! சல்வார் அழகில் புன்னகை பூப்போல் துள்ளலான எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்!

Latest Videos

click me!