பிரபல சீரியலை விரும்பி பார்க்கும் ரஜினிகாந்த்... சூப்பர்ஸ்டாரே சூப்பர்னு சொன்ன அந்த சீரியல் எது தெரியுமா?

First Published | Nov 28, 2022, 2:10 PM IST

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ரஜினி, தனக்கு பிடித்த சீரியல் பற்றி ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசி உள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, ஷிவ்ராஜ்குமார், வஸந்த் ரவி, விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் ரஜினி. அதில் ஒரு படத்தை அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகி வருகிறது. அதேபோல் மற்றொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... மாஸ்டர் பிளானுடன் திடீர் என ஹைதராபாத் விசிட் அடித்த தனுஷ்..! ஏன் தெரியுமா? வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ..

Tap to resize

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் ரஜினி, தனக்கு பிடித்த சீரியல் பற்றி ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசி உள்ளார். பிரபல சின்னத்திரை இயக்குனரான திருச்செல்வத்தின் நண்பர் ஒருவர் ஜெயிலர் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்தித்து பேசினாராம். அப்போது சன் டிவியில் தற்போது திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தான் தனக்கு மிகவும் பிடித்த சீரியல் என கூறினாராம்.

அந்த சீரியலை தனது குடும்பத்தினரும் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் ரஜினி தெரிவித்ததாக இயக்குனர் திருச்செல்வம் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வரும் திருச்செல்வம், முன்னதாக தேவையாணி நடித்து 6 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பான கோலங்கள் சீரியலை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இது புதுசு கண்ணா புதுசு! புதுப் பொழிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் பாபா - படத்தை மெருகேற்ற மீண்டும் டப்பிங் பேசிய ரஜினி

Latest Videos

click me!