சின்னத்திரை நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் அதிரடி கைது - பின்னணி என்ன?

First Published | Dec 17, 2022, 6:42 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸ் ஆன நாஞ்சில் விஜயனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸ் ஆனவர் நாஞ்சில் விஜயன். இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆனது.

அப்போது வனிதாவுக்கு எதிராக ரவுடி பேபி சூர்யா எனும் டிக்டாக் பிரபலத்துடன் சேர்ந்து யூடியூப்பில் கருத்துக்களை தெரிவித்து வந்தார் நாஞ்சில் விஜயன். அப்போது சூர்யா தேவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் வனிதா. அதுமட்டுமின்றி நாஞ்சில் விஜயனும், சூர்யா தேவியும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் வனிதா தரப்பு வழக்கறிஞர்.

இதையும் படியுங்கள்... திடீரென தூக்கப்பட்ட உதயநிதி பெயர்... ரெட் ஜெயண்ட்டில் நிகழ்ந்த அதிரடி மாற்றம் - காரணம் என்ன?

Tap to resize

இந்த வீடியோ வெளியான பின் சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் வசைபாடி வந்த நிலையில், ஒருநாள் சூர்யா தேவி 4 ரவுடிகளை அனுப்பி தன்னை தாக்கியதாக நாஞ்சில் விஜயன் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சூர்யா தேவி மீது வளசரவாக்கம் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார் நாஞ்சில் விஜயன்.

இதையடுத்து தன்னை நாஞ்சில் விஜயன் அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக சூர்யா தேவியும் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆறப்போட்டிருந்த போலீசார், தற்போது ஆக்‌ஷன் எடுத்துள்ளனர். சூர்யா தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் விஜயன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... கோவை சரளாவுடன் மோதும் ஜி.பி.முத்து: சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Latest Videos

click me!