Ayyanar Thunai E294 : ரெளடிகளை வீட்டுக்கே அழைத்து வந்த நடேசன்... சேரன் செய்த மாஸ் சம்பவம்

Published : Jan 12, 2026, 10:46 AM IST

அய்யனார் துணை சீரியலில் சேரன் மற்றும் சந்தாவிடம் பீச்சில் வம்பிழுந்த ரெளடிகளை நடேசன் வீட்டுக்கே அழைத்து வந்திருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் சேரன் வீட்டில் இல்லாததால் நாமளே சமைக்கலாம் என பாண்டியன், சோழன் மற்றும் நிலா ஆகியோர் முடிவெடுத்த நிலையில், என்ன சமைக்கலாம் என யோசிக்கையில், நிலாவும், சோழனும் வாக்குவாதம் செய்கிறார்கள். இதைப்பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன், இவங்க இப்படியே சண்டைபோட்டுக்கிட்டு தான் இருப்பாங்க. நம்ம பேசாம ஓட்டலுக்கு போய் வாங்கிட்டு வந்திருவோம்னு முடிவெடுத்து, சாப்பாடு வாங்கிட்டு வருகிறார். அவர் ஓட்டலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய நிலையிலும் சோழனுக்கும் நிலாவுக்கு சண்டை முடிந்தபாடில்லை.

24
வீட்டுக்கு ரெளடிகளை அழைத்து வந்த நடேசன்

அப்போது உள்ளே எண்ட்ரியாகும் பாண்டியன், இன்னுமாடா சண்டை போடுறீங்க, நான் சாப்பாடே வாங்கிட்டு வந்துட்டேன் வாங்க சாப்பிடலாம் என அழைத்துச் செல்கிறார். அப்போது சேரன் வீட்டுக்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் சந்தாவை அழைத்து சென்றது என்ன ஆச்சு, என விசாரிக்கிறார்கள். இதையடுத்து சேரன் ரூமுக்குள் சென்று நடந்தவற்றை யோசித்துப் பார்க்கிறார். அப்போது நடேசன் ஆட்டோவில் சிலரை அழைத்து வருகிறார். அவர்கள் வேறுயாருமில்லை, சேரன் மற்றும் சந்தாவிடம் பீச்சில் தகராறு செய்த ரெளடிகளை தான் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் நடேசன்.

34
ரெளடிகளை அடிச்சு துவம்சம் பண்ணும் சேரனின் தம்பிகள்

அந்த ரெளடிகள் கையில் கட்டோடு, நிறைய அடியாட்களோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் வீடு கட்டுவதை பற்றி பேச வந்திருப்பார்கள் என நினைத்து நடேசன் அவர்களை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது சேரனை பார்த்ததும் ரெளடிகள் அடிக்க பாய்கிறார்கள். உடனே சோழன், பல்லவன், பாண்டியன் ஆகியோரை நடேசன் அழைக்க, அவர்கள் வந்து ரெளடிகளை அடிச்சு துவம்சம் பண்ணுகிறார்கள். அதன்பின்னர் எதுக்காக எங்க அண்ணனை அடிக்க வந்தீங்க என விசாரிக்கும் போது தான் அந்த ரெளடிகள் நடந்ததை கூறுகிறார்கள். உங்க அண்ணன் எங்க ஏரியாவுக்கு வந்து எங்க கையை உடைப்பான் நாங்க பார்த்துட்டு சும்மா இருக்கனுமா என கேட்கிறார்.

44
ரொமான்ஸ் மூடில் பாண்டியன்

அதன்பின்னர் தான் குட்டி பிளாஷ்பேக் காட்டுகிறார்கள். முந்தைய எபிசோடில் சேரன் சந்தாவிடம் வம்பிழுத்த ரெளடிகளிடம் இருந்து தப்பித்து சென்றதை போல் காட்டப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு உண்மையில் நடந்ததே வேறு, சேரன் சந்தாவிடம் வம்பிழுத்தவர்களை அடிவெளுத்து இருக்கிறார். பின்னர் அனைவரும் அந்த ரெளடிகளை அடித்து வீட்டை விட்டு ஓடவிடுகிறார்கள். பின்னர் பாண்டியனும் சோழனும், நீயா அண்ணேன் அடிச்ச என ஆச்சர்யத்துடன் கேட்கிறார்கள். பின்னர் பாண்டியன் கடைக்கு செல்கிறார். அங்கு வரும் வானதி, பாண்டியன் உடன் ரொமான்ஸ் பண்ணுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories