சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியை விஜயா வீட்டை விட்டு துரத்திவிட்ட நிலையில், அவருக்கு அவரது தோழிகள் அடைக்கலம் கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் விஷயத்தை கண்டுபிடித்த முத்து, அதை வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டுடைக்கிறார். ரோகிணி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டும், அவரை ஏற்க மறுத்த விஜயா, மனோஜிடம் அவளை வீட்டை விட்டு துரத்த சொல்ல, தாய் சொல்லை தட்டாத மனோஜ், ரோகிணியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிடுகிறார். போகும் முன் தன்னைப் பற்றிய உண்மையெல்லாம் மீனாவுக்கு ஏற்கனவே தெரியும் என்கிற விஷயத்தையும் போட்டுக் கொடுத்துவிட்டு சென்றார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ரோகிணியை விரட்டிய தோழிகள்
வீட்டை விட்டு துரத்திவிட்டதால், தங்க இடம் தேடி தன்னுடைய தோழியான மகேஸ்வரி வீட்டுக்கு செல்கிறார் ரோகிணி. ஆனால் மகேஸ்வரியின் கணவர் சம்மதிக்க மறுத்ததால், அங்கிருந்து கிளம்பி வித்யா வீட்டிற்கு செல்கிறார். வித்யாவின் கணவர் முத்துவுக்கு நெருக்கமானவர் என்பதால், ரோகிணிக்கு அடைக்கலம் கொடுத்தால் முத்து கோபித்துக் கொள்வார் என சொல்லி ரோகிணியை தன் வீட்டில் தங்க சம்மதிக்க மறுக்கிறார். பின்னர் விஜயாவின் தோழியான பார்வதியின் வீட்டுக்கு செல்கிறார் ரோகிணி. அங்கு ரோகிணியிடம் 10 ஆயிரம் ரூபாயை கொடுக்கும் பார்வதி, இதை வச்சிக்கோ ஆனால் என்னால் உன்னை இங்கு தங்கவைக்க முடியாது என சொல்லிவிடுகிறார்.
34
அடைக்கலம் தரும் சிந்தாமணி
நான் உன்னை இங்கு தங்கவைத்தால், விஜயா கோபித்துக்கொள்வால் என சொல்லி அனுப்பிவிடுகிறார் பார்வதி. இதையடுத்து வில்லாதி வில்லி சிந்தாமணி வீட்டுக்கு செல்கிறார் ரோகிணி. அங்கு சென்றதும் அவளை முதலில் சாப்பிட சொல்கிறார் சிந்தாமணி. அப்போது அவரிடம் நன்றி தெரிவிக்கும் ரோகிணி, யாருமே தனக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை. என்னுடைய தோழிகளே என்னை துரத்திவிட்டார்கள். ஆனால் நீங்கள் மட்டும் தான் என்னை இங்கு தங்கிக் கொள்ள சம்மதித்துள்ளீர்கள். ரொம்ப நன்றி என கூறுகிறார். நன்றியெல்லாம் எதுக்கு, நீ இங்கு எவ்வளாவு நாள் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என சொல்கிறார் சிந்தாமணி.
சிந்தாமணி எதைச் செய்தாலும் அதில் ஒரு உள்நோக்கம் இருக்கும். தற்போது ரோகிணிக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதன் பின்னணியிலும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. ரோகிணி மூலம் விஜயாவின் வீட்டை எழுதி வாங்க பிளான் போட்டு இருக்கிறார் சிந்தாமணி. இதுதெரியாமல் அவரிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன ஆகப்போகிறது? ரோகிணியை டைவர்ஸ் செய்யும் முடிவில் இருக்கும் மனோஜ் மனம் மாறுவாரா? சிந்தாமணியின் தில்லாலங்கடி வேலை ரோகிணிக்கு தெரியவருமா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் விடை கிடைக்கும்.