இனி நான் எதிர்நீச்சல் சீரியலில் இல்லை... ஒரேபோடாக போட்ட நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published : Jan 10, 2026, 03:36 PM IST

சன் டிவியில் அமோக வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நீண்ட நாட்களாக தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகை ஒருவர், தற்போது தான் அந்த சீரியலில் இருந்து விலகியதை இறுதி செய்துள்ளார்.

PREV
14
Actress Quit Ethirneechal Thodargiradhu Serial

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஓராண்டைக் கடந்து வெற்றிகரமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த சீரியலில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, பார்வதி ஆகியோர் நாயகிகளாக நடித்து வந்தனர். இவர்களை அடக்கி ஆள நினைக்கும் வில்லனாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த சீரியல் சன் டிவியில் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பி ரேஸிலும் இந்த சீரியலுக்கு நல்ல ரேட்டிங் கிடைத்து வருகிறது.

24
எதிர்நீச்சல் சீரியலில் விலகியது யார்?

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் மனைவியாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் கனிகா. இவர் கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியலில் தலைகாட்டவில்லை. ஏனெனில் ஈஸ்வரி, தன் மகன் தர்ஷனுக்கு அவன் விரும்பிய பார்கவியை தான் திருமணம் செய்துவைப்பேன் என ஒற்றைக்காலில் நின்றார். ஆனால் அதனை எதிர்த்த ஆதி குணசேகரன், தர்ஷனுக்கு அன்புக்கரசியை கட்டிவைப்பேன் என்று சொன்னதோடு, ஈஸ்வரியை கோபத்தில் தாக்கினார். இதில் அவர் அடித்ததால், சுவற்றில் தலை இடித்து பலத்த காயம் ஏற்பட்டு கோமாவுக்கு சென்றார் ஈஸ்வரி.

34
சீரியலில் தலைகாட்டாத கனிகா

ஈஸ்வரிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுபோல் காட்டுகின்றனர். ஈஸ்வரி ஆசைப்பட்டபடியே அவரது மகன் தர்ஷனுக்கு பார்கவியுடன் திருமணம் நடந்தது. அதுமட்டுமின்றி ஒரு பிசினஸ் செய்ய வேண்டும் என்பது ஈஸ்வரியின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. இதற்காக தமிழ் சோறு என்கிற பெயரில் ஃபுட் டிரக் பிசினஸை நடத்தலாம் என்று ஐடியாவெல்லாம் கொடுத்திருந்தார் ஈஸ்வரி. அவரின் ஆசைக்கு இணங்க தற்போது தமிழ் சோறு ஃபுட் டிரக்கை வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறார்கள் ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா. ஆனால் ஈஸ்வரி மட்டும் இன்னும் கண்விழிக்காமலே கோமாவில் இருக்கிறார்.

44
விலகிய கனிகா

இப்படி பல மாதங்களாகவே அவர் கோமாவில் இருப்பது போல் காட்டப்படுவதால், அவர் இனி இந்த சீரியலில் வருவாரா மாட்டாரா என்கிற கேள்வி எழத் தொடங்கியது. அதற்கு ஈஸ்வரியாக அந்த சீரியலில் நடித்துள்ள கனிகாவே விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, தான் இனி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வரமாட்டேன் என இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் இடத்தை அந்த சீரியலில் இனி யாரும் நிரப்ப முடியாது என கூறி வருகின்றனர். கனிகா விலகி உள்ளதால் அடுத்து யார் ஈஸ்வரியாக நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories