கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Dec 10, 2025, 11:57 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் வீட்டில் இருப்பது பிடிக்காமல் அவனை வீட்டை விட்டே துரத்த வேண்டும் என விஜயா பிளான் போட்டு வரும் நிலையில், ஒரு எதிர்பாரா ட்விஸ்ட் நடந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் மீது மனோஜுக்கு பாசம் வர வேண்டும் என்பதற்காக, தனக்கு பேய் வந்தது போல் மாறிய ரோகிணி, கிரிஷின் அம்மா கல்யாணியின் ஆவி வந்திருப்பதாக கூறி மனோஜை மிரட்டுகிறார். அவனிடம் கிரிஷுடன் நீ பாசமாக இருந்தால் தான் உன்னுடைய மனைவி ரோகிணியை நான் எதுவும் செய்ய மாட்டேன் என சொல்கிறார். அதுமட்டுமின்றி பசியில் இருக்கும் கிரிஷுக்கு சாப்பாடு ஊட்டிவிட சொல்கிறார். மனோஜும் கிரிஷுக்கு சாப்பாடு ஊட்டிவிடுகிறார். இதைப்பார்த்து மீனா, முத்து ஆகியோர் அதிர்ச்சியில் உறைய, விஜயா ஷாக் ஆகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
மனோஜுக்கு ஷாக் கொடுத்த கிரிஷ்

மனோஜ் தன் மீது பாசம் காட்டுவதால், அவருக்காக எதையும் செய்ய துணிந்த கிரிஷ், மறுநாள் காலையில் வீட்டில் உள்ள மனோஜின் ஷூவை எடுத்து பாலிஷ் போடுகிறார். அப்போது நீ ஏன் இதெல்லாம் செய்யுற என மீனா கேட்க, எனக்கு பாலிஷ் போடனும்னு ஆசையாக இருந்ததால் போட்டேன் என கூறுகிறார். பின்னர் மனோஜ் வந்து, ஏண்டா இதெல்லாம் பண்ற என கேட்டதற்கு நீங்க என்னை செல்லும் வழியில் ஸ்கூலில் டிராப் பண்ணிவிடுகிறீர்களா என கிரிஷ் கேட்கிறார். அப்போது ஷூ பாலிஷ் போட்டது இதுக்குத்தானா என கேட்கும் மனோஜ், அதெல்லாம் என்னால முடியாது என மறுக்கிறார்.

34
குழப்பத்தில் விஜயா

பின்னர் ரோகிணியிடம் நான் சொன்னது கரெக்ட் தான ரோகிணி என மனோஜ் கேட்க, அவரின் முகம் சிவக்கிறது. இதனால் உஷாரான மனோஜ், அய்யய்யோ மறுபடியும் ஆவி வந்திருச்சா என பதறிப்போய் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, நானே ஸ்கூலில் விட்டுவிடுகிறேன் என சொல்கிறார். மறுபுறம் ரவியும் கோவாவில் நடைபெறும் உணவுத் திருவிழாவிற்காக கிளம்புகிறார். அவரும் தன்னை ஏர்போர்டில் டிராப் பண்ணுமாறு கூறி மனோஜ் உடன் செல்கிறார். தன் மகனின் இந்த மாற்றத்தால் விஜயாவுக்கு டவுட் வருகிறது. எல்லாரும் கிரிஷுக்கு சப்போர்டாக இருப்பதால் நமக்கு தான் பிரச்சனை வரும் என யோசிக்கிறார் விஜயா.

44
கிரிஷை தத்தெடுக்க போட்டா போட்டி

விஜயாவின் தோழி கோமதி கிரிஷை தான் தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக கூறி வீட்டுக்கு வருகிறார். மறுபுறம் முத்துவின் காரில் சென்ற தம்பதி ஒருவர் ஒரு குழந்தையை தத்தெடுக்க செல்வதாக சொல்கிறார்கள். அப்போது முத்துவுக்கும் குழந்தையை தத்தெடுக்கும் ஆசை வருகிறது. அப்போது அதற்கான புரொசிஜர்களை எல்லாம் கேட்டு தெரிந்துகொள்கிறார் முத்து. பின்னர் வீட்டுக்கு வரும் அவர், மீனாவிடம், யாரோ ஒருவர் கிரிஷை தத்தெடுப்பதற்கு பதில் நாமே தத்தெடுத்துக் கொள்ளலாமா என கேட்கிறார். இதைக்கேட்டதும் மீனா ஷாக் ஆகிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories