எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி புது பிசினஸ் தொடங்கி இருக்கும் நிலையில், அதற்கு ஆப்பு வைக்க ஆயத்தமாகி இருக்கிறார் ஆதி குணசேகரன். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் வீட்டில் இல்லாததால் தங்களின் கனவு திட்டமான தமிழ் சோறு என்கிற ஃபுட் டிரக் பிசினஸை தொடங்கும் வேலைகளை மும்முரமாக செய்து வருகிறார் ஜனனி. அதன் முதல் படியாக, ஃபுட் டிரக் ஒன்றை வாடகைக்கு வாங்கி வந்திருக்கிறார் ஜனனி. அந்த வண்டிக்கு விசாலாட்சி பூஜை போட்டதோடு, அதில் தர்ஷினியோடு சேர்ந்து ஒரு ரைடும் சென்று வந்திருக்கிறார். இவர் வீட்டில் அடிக்கும் கூத்துக்களை எல்லாம் வீட்டில் உள்ள சிசிடிவி மூலம் ஆதி குணசேகரன் பார்த்து டென்ஷன் ஆகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
வீட்டுக்கு வந்த அதிகாரிகள்
ஜனனியின் தமிழ் சோறு ஃபுட் டிரக் பிசினஸுக்கு ஒப்புதல் வழங்க அதிகாரிகள் வீட்டுக்கு வருகிறார். அவர்களிடம் தன்னுடைய ஃபுட் டிரக்கில் அனைத்தும் விதிகளை பின்பற்றி தயார் செய்யப்பட்டு உள்ளதை விவரிக்கிறார் ஜனனி. இதையடுத்து அவர்களை அங்குள்ள குடோனுக்குள் அழைத்து சென்று பேசுகிறார் ஜனனி. அங்கு தாங்கள் உணவுகள் தயார் செய்ய இருப்பதாகவும், அதற்கான உபகரணங்கள் அனைத்தும் இங்கே இருக்கிறது என கூறுவதோடு, பாதுகாப்புக்கு தேவையான பொருகளும் தங்களிடம் இருப்பதாக எடுத்துச் சொல்கிறார். பின்னர் அவர்களை வீட்டுக்குள் அழைத்து செல்கிறார் ஜனனி.
34
ஜனனியின் பிசினஸுக்கு சிக்கலா?
இடமெல்லாம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் மழைக்கு நீங்கள் சொல்லும் கிச்சன் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்பது டவுட் தான் என கூறுகிறார். உடனே சுதாரித்துக் கொண்ட ரேணுகா, எங்களுக்கு வீட்டுக்குள்ளேயே ஒரு அடுப்படி இருக்கிறது. வெளியே மழை பெய்தால், நாங்கள் இங்கே வைத்து சமைத்துக் கொள்வோம் என கூறுகிறார். பின்னர் அந்த அதிகாரிகள் வீட்டில் உள்ள அடுப்படியை பார்த்துவிட்டு, ஓகே சொல்கிறார்கள். இதையடுத்து சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்களை பரிசோதனை செய்ய அமர்கிறார்கள். நந்தினி, அனைத்து மசாலாக்களையும் கொண்டு வந்து கொடுக்கிறார்.
இப்படி ஜனனி தமிழ் சோறு பிசினஸில் முழுவீச்சில் இறங்கி இருப்பதால், அதில் குட்டைய குழப்ப தயாராகி வருகிறார் ஆதி குணசேகரன். தன்னை ஓடி ஒளிய வைத்த ஜனனியை பழிவாங்கும் விதமாக வீட்டிலேயே இருக்கும் தன்னுடைய ஆட்களான அறிவுக்கரசியை வைத்து ஜனனியின் பிசினஸிற்கு ஆப்பு வைக்க ஆயத்தம் ஆகிறார் ஆதி குணசேகரன். அவர் என்ன செய்யப்போகிறார்? ஆதி குணசேகரனின் சூழ்ச்சியில் இருந்து தப்பிப்பாரா ஜனனி? ஆதி குணசேகரனை கைது செய்யுமா போலீஸ்? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.