பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!

Published : Dec 09, 2025, 07:35 PM IST

Pandian Stores 2 Serial 658th Episode Highlights : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 658ஆவது எபிசோடானாது ராஜீயின் காட்சியில் ஆரம்பித்து தங்கமயில் காலில் விழும் காட்சிகளுடன் முடிந்துள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

PREV
14
Pandian Stores 2 Serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 658ஆவது எபிசோடில் எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்ட பாண்டியன் அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எழுந்தது. இப்படிப்பட்ட பெண்கள் எல்லோரது குடும்பத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் அதிக விவாகரத்து நடப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகவும் சொல்லப்படுகிறது. ஒரு சில குடும்பங்களில் ஆண்களும் தவறு செய்கிறார்கள். இது எல்லோரது வீட்டிலும் நடக்கும் ஒரு சம்பவம் என்று எளிதில் விட்டு விட முடியாது. அதனை எதிர்கொள்பவரின் மனநிலை எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதைத் தான் இங்கு பார்க்க வேண்டும்.

24
Raji Exposes The Truth About Thangmayil Gold Jewels

அப்படித்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும், எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்னவோ தங்கமயில் தான். ஆனால், அவர் தன்னை நல்லவராக காட்டிக் கொண்டு சரவணனை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகிக் கொண்டே இருந்தார். தங்கமயில் சொல்வதைத் தான் குடும்பத்தில் உள்ள அனைவருமே கேட்டனர். ஒரு வார்த்தை கூட சரவணனிடம் என்ன நடந்தது என்று கேட்கவே இல்லை.

34
Raji and Thangamayil

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், ராஜீ மற்றும் கதிர் இருவரும் இந்த பிரச்சனை பற்றி பேசி கொண்டிருந்தனர். அப்போது ராஜீ இன்னொரு பொய் ஒன்றையும் தங்கமயில் சொல்லியிருப்பதாக சொல்லி நகை மேட்டரை வெளிப்படுத்தினார். அதாவது தங்கமயில் போட்டு வந்த 80 சவரன் நகைகளில் 8 சவரன் மட்டுமே தங்கம். தனது குடும்பக் கஷ்டம், தனக்கு பின்னால் ஒரு தங்கையும் இருக்கிறார் என்று கருதி தன்னை திருமணம் செய்து கொடுத்தனர் என்று சொன்னதாக சொன்னார்.

44
Pandian Stores 2 Serial Tomorrow Episode Update

இதைக் கேட்டு கதிர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், இந்த சம்பவம் சரவணனுக்கு தெரியாது என்றும் கூட சொன்னார். அதன் பின்னர் இருவரும் மீனாவிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு ரெடியாக இருக்கிறார்கள். கடைசி காட்சியாக எல்லா பிரச்சனைக்கும் காரணமான தங்கமயில் பாண்டியன் காலில் விழுவதற்கு வந்தார். ஆனால், பாண்டியன் கண்டுகொள்ளவே இல்லை. அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. அடுத்து என்ன நடக்கிறது என்று நாளைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories