தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!

Published : Dec 09, 2025, 03:57 PM IST

Raji Exposes truth about Thangamayil Gold Jewels : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இத்தனை நாட்களாக யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த தங்கமயிலின் நகை விஷயத்தை ராஜீ முதல் முறையாக கதிரிடம் கூறியுள்ளார்.

PREV
17
பழனிவேல் மற்றும் தங்கமயில்

பாண்டியனின் குடும்பம் ஏற்கனவே பழனிவேல் இப்படி செய்துவிட்டான் என்ற மன வேதனையில் இருந்த நிலையில் இப்போது தங்கமயிலால் குடும்பமே நிலைகுலைந்து நிற்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் குடும்பத்தில் சரவணனுக்கு மட்டும் பாண்டியன் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். அதுவும் சுயம்வரம் வேறு. சுயம்வரம் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற சரவணனுக்கு அங்கேயே பெண் அமைந்தது. அதன் பிறகு நிச்சயதார்த்தம், திருமணம் என்று பாண்டியன் குடும்பம் குஷியாக இருந்தது.

27
சரவணன் மற்றும் தங்கமயில் பழனி

திருமணத்திற்கு பிறகு சரவணன் மற்றும் தங்கமயில் இருவருக்கும் இடையில் பிரச்சனை மேல் பிரச்சனை வந்தது. சரவணன் தான் ஏதோ பிரச்சனை செய்கிறார் என்று பாண்டியனும் கோமதியும் நினைத்துக் கொண்டு அவரை சரமாரியாக திட்டினர். ஆனால், சரவணன் தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் தெரிந்து யாரிடமும் சொல்லாமல் இத்தனை நாட்களாக மறைத்துவிட்டார்.

37
சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு

ஒரு கட்டத்தில் சரவணனுக்கு வேறொரு பெண்ணை பிடித்திருக்கிறது என்றும், அதனால் தான் தன் மீது கோபம் கொள்கிறார் என்றும் கோமதியிடம் சொன்னார். இந்த நிலையில் தான் தங்கமயிலைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சரவணன் குடும்பத்தில் உள்ள அனைவர் முன்னிலையிலும் போட்டு உடைத்துவிட்டார். இதைக் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். எம் ஏ படிப்பு, ஹோட்டலில் சர்வர் வேலை, சர்ட்டிபிகேட் காணாமல் போய்விட்டது மற்றும் 2 வயது மூத்தவர் இப்படி அடுக்கடுக்கான உண்மைகளை இத்தனை நாட்களாக தனது மனதிற்குள் பூட்டி வைத்திருந்த நிலையில் இப்போது சரவணன் அதனை வெளிப்படுத்தினார்.

47
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இதைக் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தது தான் மிச்சம். இரவு முழுவதும் யாரும் தூங்கவில்லை. வீடே கலையிழந்து நின்றது. இதற்கிடையில் தனது மகன் கிழித்த கோட்டை கூட தாண்டமாட்டான். எங்களுடைய பேச்சுக்கு மறுப்பேச்சு சொல்லமாட்டேன். அப்படிப்பட்டவன் உன்னை கொடுமைப்படுத்தினானா? இதில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று வாய்க்கூசாமல் என்னிடம் சொன்ன. எவ்வளவு துணிச்சல், பொய், பித்தலாட்டம், நாடக்காரி என்று தனது கோபத்தை வெளிப்படுத்திய கோமதி கடைசியாக தங்கமயிலுக்கு சாபம் விட்டார்.

57
உண்மையை சொன்ன ராஜீ

இந்த நிலையில் தான் இதுநாள் வரை யாருக்கும் தெரியாமல் இருந்த நகை விஷயமும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆம், ராஜீ மற்றும் மீனாவிற்கும் மட்டுமே தெரிந்த விஷயம். ராஜீ மற்றும் கதிர் இருவரும் சரவணனை நினைத்து தூங்காமல் இருந்த சூழலில் ராஜீ இன்னொரு விசயத்திலும் பொய் சொல்லியிருக்கிறார்கள். அது தாலி பிரித்து கோர்க்கும் நாளன்று தங்கமயில் அவரது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் போட்டிருந்த 80 சவரன் நகைகளில் 8 சவரன் நகை மட்டும் தான் தங்கம். மற்ற நகைகள் அனைத்தும் கவரிங். இந்த உண்மை சரவணன் மாமாவிற்கு தெரியாது. தெரிந்திருந்தால் இந்த உண்மையும் வெளிச்சத்திற்கும் வந்திருக்கும்.

67
சரவணன் மாமாவுக்கு தெரியாது

இப்போதே மீனா அக்கா வீட்டிற்கு சென்று இதைப் பற்றி பேச வேண்டும் என்றனர். பிறகு செந்தில் மற்றும் மீனாவிடமும் இதைப் பற்றி பேசினர். அப்போது நகை விசயத்தை செந்திலிடம் சொல்லவில்லை. அடுத்து என்ன நடக்கிறது? நகை மேட்டர் எப்போது பாண்டியன், கோமதி, சரவணனுக்கு தெரியவரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

77
பாண்டியன் மற்றும் கோமதி

கடைசியாக பாண்டியன் மற்றும் கோமதி தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நீங்கள் கடைக்கு செல்வதற்குள் சரவணன் விசயத்தில் ஒரு முடிவு எடுங்கள். அந்த குடும்பத்தை சும்மாவே விடக் கூடாது என்று கோமதி பேசினார். கடைசியாக தங்கமயில் தனது அறையைவிட்டு வெளியில் வந்து பாண்டியன் காலில் விழுந்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 658ஆவது எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories