ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி குடும்பத்தின் காவல் தெய்வமாக கார்த்திக் இருந்து வருகிறார். ரேவதியை திருமணம் செய்து கொண்டு வீட்டோட மாப்பிள்ளையாக வலம் வந்த கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிறகு என்ன செய்ய, உண்மையை சொல்லவே வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால், தனது மனைவியை தன்னுடன் அழைத்து வரவில்லை. அம்மாவின் கோபம் தனிந்த பிறகு அழைத்து செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் தனியாக வெளியேறினார்.
25
Karthik Saved Chamundeshwari
கார்த்திக்கை வெளியேற்றிவிட்டதால் குளிர் விட்டுப் போன காளியம்மாள், சாமுண்டீஸ்வரியை கொல்ல மாயாண்டியை அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து மயில்வாகனம் ஒரே ஒரு போன் கால் செய்ய அடுத்த நொடியே வீட்டிற்கு வந்து ரௌடிகளை அடித்து துவம்சம் செய்தார். கடைசியில் சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரியவே கோபம் கொண்டார்.
35
Zee Tamil Karthigai Deepam
இந்த நிலையில் தான் கம்பி எண்ணிக் கொண்டிருந்த காளியம்மாள், சிவணாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் அடங்கிய மூவர் கூட்டணி எப்படியோ வெளியில் வரவே அவர்கள் முதலில் கார்த்திக்கிற்கு ஸ்கெட்ச் போட்டனர். ஆனால், அவரோ காளியம்மாள் ஆசை ஆசையாக கட்டிய வீட்டிற்கும், சிவனாண்டி காருக்கும் பாம் வைத்து தான் யார் என்று காட்டினார். உயிரி பயத்தில் நடு நடுங்கிப் போன மூவர் கூட்டணி மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இன்ஸ்பெக்டரை அறைந்த குற்றத்திற்கு கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
45
Karthigai Deepam 2 Serial Update
அவர்களுக்குப் பதிலாக கூடவே இருந்து குழி பறித்துக் கொண்டிருக்கும் சந்திரகலா பஞ்சாயத்து தலைவராக இருக்கும் தனது அக்காவை பழி தீர்க்க புதிய ஐடியாவை கையில் எடுத்தார். அதாவது இருவரை ஏற்பாடு செய்து அவர்கள் மூலமாக கோல்டு பிஸ்கட் அடங்கிய சாக்லேட்டை கொடுத்து அனுப்பினார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு போன் போட்டு இந்த மாதிரி பஞ்சாயத்து போர்டு தலைவர் லஞ்சம் வாங்கியுள்ளார் என்று போட்டுக் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்து சோதனையில் ஈடுபட எதுவுமே இல்லாமல் சாரி மேடம் ராங்க் இன்ஃபர்மேஷன் என்று சொல்லிவிட்டு நடையை கட்டினர்.
55
Kathigai Deepam Serial Today Episode
அப்போது தான் கார்த்திக் காளியம்மாவிற்கு போன் போடவே இதற்கெல்லாம் நான் தான் காரணம். நான் தான் ஸ்வீட் பாக்ஸ் டப்பாவை மாற்றி வைத்தேன் என்று சொல்கிறார். இதை கேட்டு காளியம்மாள் அதிர்ச்சி அடைகிறார். கடைசியாக கார்த்திக் தான் தங்களுக்கு மேனேஜராக வர வேண்டும் என்று தொழிலாளிகள் அனைவரும் கார்த்திக் வீட்டிற்கு வருகின்றனர். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.