மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா குரேஷி..?

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நன்றி என குரேஷி பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள் அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக கருதினர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சி. கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி டி.ஆர்.பியில் தொடர்ந்து கலக்கி வருவதற்கு முக்கிய காரணம் இதில் வரும் கோமாளிகள் தான். அந்த வகையில் முதல் சீசனில் இருந்து புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி, குரேஷி ஆகியோர் கோமாளிகளாக கலக்கி வந்தனர். இந்த சீசன் முதல் ஷிவாங்கி குக் ஆக களமிறங்கி அதிரடி காட்டி வருகிறார்.

பேமஸ் கோமாளிகளாக இருந்து வந்த பாலா மற்றும் மணிமேகலை அடுத்தடுத்து இந்நிகழ்ச்சியை விட்டு விலகியது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மணிமேகலை எதற்காக விலகினார் என்கிற காரணம் தெரியாமல் புலம்பி வந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் விதமாக குரேஷி ஒரு டுவிட்டை போட்டு இருந்தார். அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்... ரோலெக்ஸ் சூர்யா போல் கேமியோ ரோலில் நடித்து மிரட்ட தயாராகும் கமல்ஹாசன்... அதுவும் யார் படத்துல தெரியுமா?


இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், குரேஷியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாக கருதி வந்தனர். அடுத்த சில மணிநேரங்களிலேயே அந்த டுவிட்டை நீக்கிவிட்ட குரேஷி, ‘உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு’ என மற்றுமொரு டுவிட்டை போட்டார். இப்படி மாறி மாறி டுவிட் போட்டதால் அவர் குக் வித் கோமாளியை விட்டு வெளியேறிவிட்டாரா இல்லையா எனத் தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

இப்படி டுவிட்டரில் குழப்பத்தை ஏற்படுத்திய குரேஷி தற்போது வதந்திகளை நம்ப வேண்டாம் என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் ‘காமெடி பண்ணாம சாகமாட்டேன்.. குக் வித் கோமாளியை விட்டு போகமாட்டேன்” என ரைமிங்கான வசனத்துடன் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து வருவேன் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். அவரின் இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்...  சிறுத்தை சிவா டைரக்‌ஷன்ல 4 படம் நடிச்ச அஜித்... ஷங்கரின் 4 பிரம்மாண்ட படங்களை ரிஜெக்ட் செய்த கதை தெரியுமா?

Latest Videos

click me!