தன்னைவிட வயதில் மூத்த நடிகையை திருமணம் செய்துகொண்ட ‘கனா காணும் காலங்கள்’ ராஜா வெற்றி பிரபு

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வரும் ராஜா வெற்றி பிரபுவும், தீபிகா வெங்கடாசலமும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மிகவும் பேமஸ் ஆனது. ஆரம்பத்தில் பள்ளிப்பருவத்தை மையமாக வைத்து கனா காணும் காலங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து அதே பெயரில் கல்லூரி பருவ நட்பை மையமாக வைத்து கனா காணும் காலங்கள் சீரியலை நடத்தினர். இந்த இரண்டுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, அதில் நடித்த நடிகர், நடிகைகள் இன்று சின்னத்திரை சீரியல்களில் முன்னணி ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், கனா காணும் காலங்கள் தொடரின் புதிய சீசன் ஓடிடியில் ஒளிபரப்பாகி வந்தது. பள்ளிப்பருவத்தை மையமாக வைத்து உருவான இந்த தொடரின் முதல் சீசன் வெற்றியடைந்ததை அடுத்து, தற்போது அதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீசனிலும் நடித்த நடிகர், நடிகைகளும் இன்ஸ்டாகிராம் மூலம் படு பேமஸ் ஆகிவிட்டனர்.


அப்படி கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பேமஸ் ஆனவர்கள் தான் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு. இதில் தீபிகா அபி என்கிற கேரக்டரிலும், ராஜா வெற்றி பிரபு கெளதம் என்கிற கேரக்டரிலும் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் தான் தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ரஜினியின் எஜமானாக நடித்தாலும்; ரியல் லைஃப்பில் தோழனாக தோல் கொடுத்தவர் சரத்பாபு - இருவரின் நட்பு பற்றி தெரியுமா

இவர்கள் இருவரும் ஒரே சீரியலில் நடித்தாலும் காதலித்து திருமணம் செய்துகொள்ளவில்லையாம். இருவருமே கடந்த 6 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து வந்த சமயத்தில் இருவரது வீட்டிலுமே அவர்களுக்கு வரன் பார்த்து வந்துள்ளனர். இதைப்பற்றி பேசும்போது இருவருமே நாம் ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது என கேட்க, உடனடியாக வீட்டில் பேசி ஒருவாரத்தில் கன்பார்ம் ஆனதாம் இவர்களது திருமணம்.

ராஜா வெற்றி பிரபு - தீபிகா இருவருக்குமே அவர்களது குடும்பத்தினர் ஜாதகம் பார்த்து தான் திருமணம் செய்து வைத்துள்ளார்களாம். இருவருக்குமே 10-ல் 9 பொருத்தம் இருந்ததாக தீபிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆகி உள்ள தீபிகா - ராஜா வெற்றி பிரபு ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. நடிகர் ராஜா வெற்றி பிரபுவை விட தீபிகா ஒரு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கமல் முதல் அப்பாஸ் வரை.. சிம்ரனை காதலித்து கைவிட்ட ஹீரோஸ் - நடிகையின் சர்ச்சைக்குரிய லவ் லைஃப் பற்றி தெரியுமா?

Latest Videos

click me!