பீரியட்ஸ் டைம்ல கூட.. 24 மணிநேரமும் செக்ஸ்; ‘நானும் மனுஷன் தான’ சம்யுக்தாவின் புகாருக்கு விஷ்ணுகாந்த் விளக்கம்

First Published | May 21, 2023, 2:22 PM IST

சீரியல் நடிகை சம்யுக்தா, தன் மீது கூறிய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அவரின் முன்னாள் காதலன் விஷ்ணுகாந்த் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.

சீரியலில் ஜோடியாக நடித்த பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிகழ்வுகள் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகின்றன. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா, ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் - ஆலியா மானசா, திருமணம் சீரியல் பிரபலங்களான சித்து - ஷ்ரேயா, பூவே பூச்சூடவா தொடரில் நடித்த மதன் - ரேஷ்மா என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். அந்த பட்டியலில் அண்மையில் இணைந்த ஜோடி தான் விஷ்ணுகாந்த் - சம்யுக்தா.

இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்தபோது காதலித்தனர். பின்னர் கடந்த மார்ச் மாதம் இந்த ஜோடிக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமான இரண்டே மாதத்தில் தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இருவருமே நீக்கினர். இதனால் இவர் இருவரும் பிரிந்துவிட்டார்களா என்கிற ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

Tap to resize

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தாங்கள் பிரிந்துவிட்டதை தனித்தனியாக அறிவித்ததோடு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். சம்யுக்தாவின் தந்தை அடிக்கடி வீட்டுக்கு வருவதால் தான் தங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக விஷ்ணுகாந்த் கூறினார்.

இதையடுத்து விஷ்ணுகாந்த் மீதான குற்றச்சாட்டுகளை லிஸ்ட் போட்டு சொன்ன விஷ்ணுகாந்த், அவர் 24 மணிநேரமும் செக்ஸ் மூடிலேயே இருப்பார் என்றும், தன்னைவிட 10 வயது குறைவான பெண் என்றுகூட பார்க்காமல் பீரியட்ஸ் டைம்ல கூட அவர் தன்னை கஷ்டப்படுத்தியதாகவும் கூறியதோடு, அவர் எது சொன்னாலும் சரியென தலையாட்ட வேண்டும் என நினைக்கிறார் என விஷ்ணுகாந்த் மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் சம்யுக்தா.

இதையும் படியுங்கள்... அட்ராசக்க... உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்நிலையில், சம்யுக்தாவின் புகாருக்கு விஷ்ணுகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : “பீரியட்ஸ் டைம்ல வலி அதிகமா இருக்கும்னு சம்யுக்தா சொல்வார். ஒருநாள் அப்படி சொன்னபோது தான், நீ படுத்து ரெஸ்ட் எடுனு சொல்லிட்டு, நான் அவள் நடித்த சீரியலை பார்க்க போவதாக சொன்னேன். அதற்கு கோபப்பட்டு என்னிடம் சண்டை போட்டாள்.

சத்தமா பேசும்போது மட்டும் வலிக்கவில்லையா? அப்போ நடிக்கிறியானு கேட்டேன். அப்பதான் எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஆரம்பமானது. அப்போ கோபித்துக்கொண்டு தன் வீட்டுக்கும் போகிறேன் என அவர் அப்பாவோடு கிளம்பினார். நான் என் காரை எடுத்துக்கொண்டு போ என்று சொன்னேன். இதுதான் நடந்தது.

அதேமாதிரி 24 மணிநேரமும் செக்ஸ் மூடில் தான் இருப்பார் என சம்யுக்தா சொன்னதற்கு பதிலளித்த விஷ்ணுகாந்த், நானும் மனுஷன் தான, யாராலும் 24 மணிநேரமும் செக்ஸ் மூடில் இருக்க முடியாது. திருமணத்துக்கு பின்னர் அவரது தந்தையால் எங்களுக்குள் தனியாக பேசிக்கொள்ள கூட பிரைவசி கிடைக்கல. காலையும், மாலையும் வீட்டுக்கு வருவார், அது எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னேன் என விஷ்ணுகாந்த் விளக்கம் அளித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... மகாலட்சுமி உடன் சண்டையா? சிங்கிளாக போட்டோ போட்டு ரவீந்தர் பதிவிட்ட சோகமான பதிவு

Latest Videos

click me!