தொலைக்காட்சி சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதால், புதுபுது சீரியல்கள் வந்த வண்ணம் உள்ளன. முதலில் சீரியல் என்றாலே சன் டிவி என சொல்லும் அளவுக்கு அதில் ஏராளமான சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. தற்போது அதற்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சிகளும் பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.