15 மாத குழந்தையை தரதரவென தரையில் போட்டு அடித்த 21 வயது கணவர் மீது புகார் அளித்த 41 வயது நடிகை

Published : May 12, 2023, 02:40 PM IST

மகனை தரையில் போட்டு அடித்த கணவர் மீது இந்தி சீரியல் நடிகை சந்திரிகா சாஹா புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

PREV
15
15 மாத குழந்தையை தரதரவென தரையில் போட்டு அடித்த 21 வயது கணவர் மீது புகார் அளித்த 41 வயது நடிகை

இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சந்திரிகா சாஹா. 41 வயதாகும் இவர் சி.ஐ.டி என்கிற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை சந்திரிகா சாஹா கடந்த 2020-ம் ஆண்டு அமன் மிஸ்ரா என்கிற தொழிலதிபரை காதலித்து வந்தார். நெருங்கி பழகி வந்த இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர்.

25

அமன் மிஸ்ராவை காதலித்து வந்த சமயத்தில் சந்திரிகா கர்ப்பமாக இருந்தார். இதை அறிந்த அமன் மிஸ்ரா, அவரை கருக்கலைப்பு செய்யச்சொல்லி வலியுறுத்தி உள்ளார். அதையும் மீறி குழந்தை பெற்றுக்கொண்டாராம் சந்திரிகா. குழந்தை விவகாரத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும் வந்துள்ளது. 

35

லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த அமன் மிஸ்ரா - சந்திரிகா சாஹா ஜோடி கடந்த மாதம் தான் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளது. இந்த நிலையில், அமன் மிஸ்ராவிடம் தனது 15 மாத குழந்தையை விட்டுச் சென்றுவிட்டு சந்திரிகா சமைக்க போன சமயத்தில், அந்த குழந்தையை தரையில் தரதரவென இழுத்துப் போட்டு மூன்று முறை அடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... அட்லீனாலே காப்பிதானா... மகனின் பெயரைக்கூடவா காப்பி அடிச்சு வைப்பீங்க? - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

45

அமன் மிஸ்ரா அடித்ததால் வலி தாங்க முடியாமல் அந்த குழந்தை கதறி அழுதுள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பதறியடித்து வந்த சந்திரிகா, பின்னர் சிசிடிவியை ஆய்வு செய்து பார்த்தபோது தான் அமன் மிஸ்ரா, அந்த குழந்தையை அடித்ததை கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சிகளுடன் மும்பையில் உள்ள பங்கூர் நகர் காவல்நிலையத்திற்கு சென்ற சந்திரிகா அவர் மீது புகார் அளித்துள்ளார்.

55

அமன் மிஸ்ரா தாக்கியதால் படுகாயம் அடைந்த சந்திரிகாவின் 15 மாத குழந்தை தற்போது மும்பை மலாடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... ரூமுக்கு வா சரக்கடிக்கலாம்... சில்மிஷம் செய்த தயாரிப்பாளர் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்த சீரியல் நடிகை

click me!

Recommended Stories