Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... காப்பாற்ற களத்தில் குதித்த ஜனனி..!

Published : Jun 01, 2026, 10:26 AM ISTUpdated : Jun 02, 2026, 04:02 PM IST

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் காணாமல் போன தர்ஷினி பற்றி ஜனனிக்கு ஹிண்ட் கிடைத்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போனது தொடர்பாக, அவர் படிக்கும் கல்லூரியில் சென்று விசாரித்துள்ளார் சக்தி. அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தர்ஷினிக்கு தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவனுடன் பழக்கம் இருந்ததாகவும். அந்த பையன் அனாதை என்பதால் அவன் மீது தர்ஷினி தனி பாசம் வைத்திருந்ததாகவும், தோழி ஒருவர் கூறுகிறார். பின்னர் அந்த மாணவன் பற்றி விசாரிக்கு அவன் தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு செல்கிறார் சக்தி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Siragadikka Aasai : மீனாவிடம் இருந்து பணத்தை திருடிய கும்பல்... ஆணவத்தில் ஆடிய சிந்தாமணி ஜெயித்தாரா?

25
சக்திக்கு காத்திருந்த அதிர்ச்சி

சக்தி ஹாஸ்டலில் சென்று அந்த மாணவர் பற்றி விசாரிக்கையில், அவரும் காணாமல் போன விஷயம் சக்திக்கு தெரியவருகிறது. அவர் நேற்றில் இருந்து காணவில்லை என கூறுகிறார்கள். பின்னர் அந்த பையனின் ரூமில் சென்று ஏதேனும் கிடைக்கிறதா என செக் பண்ண செல்கிறார் சக்தி. உள்ளே சென்று அவரின் உடைமைகள் மற்றும் சூட் கேஸ் ஆகியவற்றை எடுத்து சக்தி செக் பண்ணி பார்க்கும் போது, உள்ளே தர்ஷினி உடன் அவர் எடுத்த போட்டோ இருக்கிறது. அதுமட்டுமின்றி நிறைய லவ் கிரீட்டிங் கார்டும் அந்த பெட்டிக்குள் இருக்கிறது. அதன்பின் அந்த பையனின் மாமா நம்பர் வாங்கிவிட்டு அங்கிருந்து செல்கிறார் சக்தி.

Pandian Stores 2 : முத்துவேலுக்கு வில்லனாக மாறும் குமார்... கதிரை சிறையில் அடைத்த போலீஸ்

35
ஜனனியை வெளுத்துவாங்கிய ஈஸ்வரியின் அப்பா

தர்ஷினி காணாமல் போன விஷயம் அறிந்து ஈஸ்வரியின் தந்தை வீட்டிற்கு வருகிறார். வந்ததும் அவர் ஜனனியை அழைத்து அவரை சரமாரியாக சாடுகிறார். நீ இந்த குடும்பத்தை அழிக்க வந்த சதிகாரி, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட, என் பேத்தியை மட்டும் நீ கொடுக்கலேனா, நான் லெட்டர் எழுதி வச்சிட்டு செத்திருவேன் என மிரட்டுகிறார். இதைக்கேட்டு கடுப்பான சக்தி, யோவ் நீ முதல்ல வீட்டை விட்டு வெளியபோயா என விரட்டுகிறார். அவரை தடுக்கும் ஈஸ்வரி, அவர் சொல்றதுல பாதி உண்மை தான சக்தி, என தன் பங்கிற்கு கொளுத்திப்போடுகிறார்.

Ilaiyaraaja : ஒரே பாட்டில் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய இளையராஜா... தேசிய விருது வென்ற அந்த பாடல் பற்றி தெரியுமா?

45
ஜனனி மீது வன்மத்தை கொட்டிய ஈஸ்வரி

அதுமட்டுமின்றி இங்க இருக்குற எல்லாரோட வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி விடுவதில் உன் பொண்டாட்டி தான் காரணமா இருக்கா என ஈஸ்வரி சொல்ல, ஜனனி மனமுடைந்து போகிறார். அந்த நேரம் பார்த்து தர்ஷினியோடு, அவளுடன் படிக்கும் மாணவன் ஒருவனும் காணாமல் போன விஷயத்தை ஒருவர் ஈஸ்வரியிடம் வந்து கூறுகிறார். அப்போது அதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி, ஏன் எங்ககிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லாம நீயே எல்லாத்தையும் சுயமா செஞ்சிட்டு இருக்க என கேட்கிறார்.

Ilaiyaraaja : மேஸ்ட்ரோ மேஜிக்... சவாலான ராகங்களிலும் புகுந்து விளையாடி இளையராஜா கொடுத்த அடிபொலி ஹிட் பாடல்கள் பற்றி தெரியுமா?

55
ஜனனி எடுத்த முடிவு

அப்போது குறுக்கிட்டு பேசும் ஜனனி, அது எந்த அளவுக்கு சரினு தெரியாம நாங்க எப்படி சொல்லுறது என கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, நீங்க யாரு என் பொண்ணு விஷயத்துல விசாரணை பண்ணுவதற்கு, உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என கேட்கிறார். வீட்டில் குழப்பமும், ஈஸ்வரிக்கு ஜனனி மீதான வெறுப்பும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அப்போது கதிர், போலீஸ் வந்து கேட்கும்போது நீங்க மட்டும் உண்மையை சொல்லவில்லை என்றால், நீங்க ரெண்டுபேரும் ஜெயிலுக்கு தான் போவீங்க என கூறுகிறார். இந்த நிலையில், ஜனனி, போலீஸ் கண்டுபிடிக்கும் முன் நானே தர்ஷினியை கண்டுபிடிக்கிறேன் என களத்தில் இறங்குகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories