Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!

Published : May 30, 2026, 01:00 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் வீட்டை ஏலத்தில் இருந்து மீட்க, முத்து மிகப்பெரிய ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் வீட்டை ஜப்தி செய்து வைத்துள்ள சிந்தாமணி, அவர்களிடம் ஒரே மாதத்தில் முழு பணத்தையும் திருப்பித் தராவிட்டால், ஏலத்திற்கு விடுவேன் என மிரட்டி இருக்கிறார். விஜயாவின் மகன் முத்து தான் அந்த கடனை அடைப்பதற்கான முழு பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். வீட்டுக்கு கொடுக்கப்பட்ட கெடு முடிவுக்கு வர இருப்பதால், ஏலத்திற்கான நாளையும் குறித்துள்ள சிந்தாமணி, அதுகுறித்து வக்கீல் நோட்டீஸும் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 : தங்கமயிலிடம் சவால்விட்ட சரவணன்... பட்ஜெட் பத்மநாபனாக மாறிய செந்தில்

25
பிளான் போடும் சிந்தாமணி

சிந்தாமணி வீட்டை ஏலத்தில் விட்டு அதை அபகரிக்கும் வேலைகளில் முழுவீச்சில் இறங்கி இருக்கிறார். இது தொடர்பாக பைனான்சியரை சந்தித்து பேசிய சிந்தாமணி, அவரிடம் ஏலத்தில் எந்தவித பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என எச்சரிக்கிறார். அதற்கு அவரும், அங்கு ஏலம் எடுக்க வருபவர்கள் எல்லாம் நம்ம ஆட்கள் தான், அதனால் கம்மியான விலைக்கே அந்த வீட்டை ஏலத்தில் எடுத்துவிடலாம் என கூறுகிறார். மறுபுறம் முத்து பணத்தை ஏற்பாடு செய்ய முயன்று வருவது பற்றியும் விசாரித்து தெரிந்துகொள்கிறார் சிந்தாமணி.

35
முத்து எடுக்கும் ரிஸ்க்

மறுபுறம் முத்து, பணத்தை ஏற்பாடு செய்ய ஒரு மிகப்பெரிய ரிஸ்க் ஒன்றை எடுக்கிறார். அது என்னவென்றால், தன்னுடைய பழைய முதலாளியிடம் இருக்கும் ஓடாத கார்களை எல்லாம் லீசுக்கு எடுத்து, அதனை தன் கையாலேயே சரி செய்து, அதனை வாடகைக்கு ஓடவிட்டு அதன்மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அந்த ஓனரிடம் பேசி அவரிடம் இருந்து கார் சாவியை வாங்கி இருக்கிறார் முத்து. பின்னர் மீனா கையில் அந்த சாவிகளை கொடுத்து, உன் கையால் வாங்கினால் தான் அது சக்சஸ் ஆகும் என கூறுகிறார்.

45
களத்தில் இறங்கிய முத்து

மீனாவும் முத்துவிடம் இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கணுமா என கேட்கிறார். ஆனால் முத்து தன்மீது உள்ள நம்பிக்கையால், அந்த கார்களை சரி செய்யும் வேலைகளில் இறங்குகிறார். வெளியே ரிப்பயர் செய்ய கொடுத்தால் அதிகம் செலவாகும் என்பதால் ஒவ்வொரு காரையும் தன் கையாலேயே சரி செய்கிறார் முத்து. மேலு அந்த கார்கள் எல்லாம் துருப்பிடித்து போய் இருப்பதால், அதற்கு பெயிண்ட் அடித்து பளபளவென மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் முத்து.

55
வீடு மீட்கப்படுமா?

இப்படி அவர் இந்த கார்களை எல்லாம் தயார் செய்து, அதை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதற்குள் சிந்தாமணி அந்த வீட்டை ஏலத்தில் விடாமல் வைத்திருப்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதற்குள் முத்துவுக்கு சாதகமாக ஒரு மிராக்கிள் நடந்தால் மட்டுமே அவரால் இந்த வீட்டை ஏலத்திற்கு செல்வதில் இருந்து தடுக்க முடியும். முத்துவுக்கு யாராவது பண உதவி செய்வார்களா? அவர் என்ன செய்து சிந்தாமணியின் சூழ்ச்சியை தடுக்கப்போகிறார்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories