எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினியை தேடிக் கண்டுபிடித்த ஜனனி, அவரை மீட்டு அழைத்து வரும்போது ஒரு கும்பல் அவர்களை துரத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. இதில் தர்ஷினியின் நண்பனான சுவாமிநாதன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் இரத்த வெள்ளத்தில் கிடக்க, அவரை மீட்ட ஜனனி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சுவாமிநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறிவிடுகின்றனர். அதுமட்டுமின்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கின்றனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அங்கு வந்த போலீசார் ஜனனியிடம் என்ன ஆச்சு என விசாரிக்கின்றனர். அதற்கு ஜனனி, இவர்களை ஒரு கும்பல் கடத்தி வைத்திருந்ததாகவும், அவர்களிடம் இருந்து மீட்டு அழைத்து வரும்போது துப்பாக்கியால் சுட்டதில் சுவாமிநாதன் இறந்துவிட்டதாகவும் கூறுகிறார். பின்னர் இராவணன் அந்த போலீசுக்கு போன் போட்டு ஜனனியை உடனே கைது செய்யுமாறு கூறுகிறார். இராவணனிடம் போலீஸ் போன் பேசும் கேப்பில் ஜனனி, தர்ஷினி மற்றும் அருந்ததி ஆகியோர் ஆஸ்பத்திரியில் இருந்து எஸ்கேப் ஆகின்றனர்.
35
வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கும் சக்தி
மறுபுறம் இராவணன், அருந்ததியை பயங்கரவாதி போல் சித்தரித்து, அவருக்கும் ஜனனிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி போலீசை ஏவிவிட, போலீசாரும், அவர்களை வலைவீசி தேடுகின்றனர். ஏதோ தப்பா இருக்கு என்பதை யூகிக்கும் ஜனனி, உடனடியாக சக்திக்கு போன் போட்டு வீட்டில் என்ன நடக்குதுனு போய் பாரு என கூறுகிறார். பின்னர் சக்தி வீட்டுக்கு கிளம்பி செல்கிறார். அதற்குள் ஈஸ்வரியின் தந்தை அங்கு வந்து தன்னுடைய பேத்தி எங்கே என கேட்டு பிரச்சனை பண்ணுகிறார். அந்த நேரம் பார்த்து சக்தி வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார்.
வீட்டுக்கு சென்றதும் இங்க என்ன நடக்குது என சக்தி விசாரிக்கிறார். அதுமட்டுமின்றி எவனோ ஒருத்தன் திட்டம்போட்டு தான் இதையெல்லாம் பண்ணிட்டு இருக்கான் என சக்தி சந்தேகப்பட, அப்போது அருகில் இருக்கும் கரிகாலன், இதெல்லாம் யாரு பண்ணுறாங்கனு எனக்கு தெரியும். அவன் பெயர் இராவணன் என சொல்ல, அனைவரும் ஷாக் ஆகின்றனர். ஆதி குணசேகரன், இராவணனை மலைபோல் நம்பினாலும், அவர் மீது சக்தி உள்பட கதிர், கரிகாலன் ஆகியோருக்கும் அதிகளவில் சந்தேகம் எழுந்துள்ளது.
55
பிரியும் ஜனனி - அருந்ததி
மறுபுறம் இராவணன், சக்தியை ஃபாலோ பண்ண சொல்லி தன்னுடைய ஆளுக்கு உத்தரவிடுகிறார். ஏனெனில் ஜனனி இருக்கும் இடம் சக்திக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அவன் ஜனனியை தேடி நிச்சயம் செல்வான். அவனை பின் தொடர்ந்து சென்று ஜனனியை போலீசில் மாட்டிவிட்டு, தர்ஷினியை தான் காப்பாற்றியது போல் காட்டி, ஆதி குணசேகரனிடம் நல்ல பெயர் வாங்க திட்டமிட்டுள்ளார் இராவணன். அதேபோல் அருந்ததியும், நாம் இருவரும் ஒன்றாக இருந்தால், கொத்தா தூக்கிட்டு போயிடுவாங்க, அதனால் இருவரும் பிரிந்து சென்றுவிடலாம் என முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.