Sirgadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை சிந்தாமணி திருப்பதியில் அடைத்து வைத்திருக்கும் விஷயம் முத்துவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், ரோகிணியை சந்தித்து அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு, அவருடைய வீட்டிலேயே சாப்பிட்டுள்ளார். அப்போது மனோஜை தன்னுடன் தனிக் குடித்தனம் வந்துவிடுமாறு ரோகிணி சொல்ல, அதற்கு மனோஜ் தனக்கு டைவர்ஸ் வேண்டும் என கேட்கிறார். உடனே ரோகிணியும் மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்ததோடு, தான் உன்னை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர 5 லட்சம் செலவழித்ததாகவும், அந்த பணத்தை திருப்பி கொடுத்தால் டைவர்ஸ் கொடுக்கிறேன் எனவும் கூறிவிடுகிறார்.
ரோகிணி 5 லட்சம் கேட்டதால் அதை எப்படி ரெடி பண்ணுவது என்கிற குழப்பத்தில் வீட்டில் தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார் மனோஜ். அப்போது அங்கு வரும் விஜயா என்ன ஆச்சு என கேட்க, அப்போது தான் ரோகிணியை சந்தித்த விஷயத்தை சொல்கிறார். அதைக்கேட்டதும் விஜயா டென்ஷன் ஆனாலும், அவள் டைவர்ஸ் கொடுக்க சம்மதித்துவிட்டால் என்று மனோஜ் சொன்னதும் குஷியாகிவிடுகிறார். இருப்பினும் ரோகிணி போட்ட கண்டிஷனை கேட்டதும், அந்த பணத்தை நீ தான் எப்படியாவது கட்ட வேண்டும் என அண்ணாமலை கூறிவிடுகிறார்.
35
ரேகாவை மீட்க போராடும் முத்து
மறுபுறம் முத்துவுக்கு போன் போடும் சத்யா, ரேகாவை அவருடைய பெற்றோர் திருப்பதியில் கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். பின்னர் இது தொடர்பாக ஆலோசிக்க சத்யா வீட்டுக்கே செல்லும் முத்து, ரேகாவிடம் போன் போட்டு பேசுகிறார். அப்போது தன்னை எப்படியாவது அழைத்து செல்லுமாரு கண்ணீர்விட்டு அழுகிறார் ரேகா. அவருக்கு ஆறுதல் சொல்லும் முத்து, தான் சொன்னபடி செய்தால், உன்னை அங்கிருந்து அழைத்து வந்துவிடலாம் என கூறுகிறார். அதற்கு ரேகாவும் சம்மதிக்க, ஒரு திட்டம் தீட்டுகிறார் முத்து.
ரேகாவிடம், நீ மயங்கி விழுந்தது போல் நடி, அப்போதான் உன்னை வீட்டில் இருந்து வெளியே கொண்டு வருவார்கள். அதன் பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதித்ததும் அங்கிருந்து நாங்கள் உன்னை காப்பாற்றிவிடுகிறோம் என கூறுகிறார். இதற்கு ஓகே சொன்ன ரேகா, மயக்கம் போட்டு விழுந்தது போல் நடிக்க, அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். இந்த தகவல் சிந்தாமணியின் கணவருக்கு தெரியவர, அவர் சிந்தாமணிக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னதும், அவர் கணவரை சந்திக்க அவரது வீட்டுக்கே வருகிறார்.
55
உஷார் ஆன சிந்தாமணி
சிந்தாமணியிடம் ரேகா மயக்கம் போட்டு விழுந்த விஷயத்தை சொல்லி அவரது கணவர் ஃபீல் பண்ண, அதற்கு சிந்தாமணி, இதெல்லாம் முத்துவின் வேலையாக தான் இருக்கும் என யூகிக்கிறார். அவன் அவளை அங்கிருந்து தூக்க என்ன வேண்டுமானாலும் செய்வான். நீங்க முதலில் உங்க ஆளுங்களை அங்கு அனுப்புங்க என கூறுகிறார். அதற்கு ரேகாவின் தந்தை, நானே நேரில் செல்கிறேன் என கூறிவிட்டு கிளம்புகிறார். இதையடுத்து என்ன ஆனது? ரேகாவை முத்து தூக்கினாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.