Siragadikka Aasai : முத்து - மீனாவை பழிவாங்க துடிக்கும் சிந்தாமணி... ரோகிணியின் சதியை கண்டுபிடித்தாரா விஜயா?

Published : Jun 19, 2026, 08:38 AM IST

Siragadikka Aasai Serial 19 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மீனாவை கைது செய்ய முடியாது என போலீஸ் கூறிவிட்டதால், சிந்தாமணி வேறு ரூட்டில் அவர்களை பழிவாங்க துடிக்கிறார்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் முத்துவும், மீனாவும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போயிருக்கும் நிலையில், அங்கு அவர்களை அனைவரும் பாராட்டி இருக்கின்றனர். அவர்கள் காதலுக்காக எடுத்த ரிஸ்கை அனைவரும் வியந்து பேசி வர, அந்த நேரத்தில் மிஷ்ரா, ஸ்வேதாவுக்கு ரூட் விடுவதை நோட் பண்ணுகிறார் முத்து. இருப்பினும் கவனிக்காதது போல் இருக்கிறார். மிஷ்ரா - ஸ்வேதா இடையேயான லவ் டிராக் இனி ஆரம்பம் ஆகப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal : ஜனனியை கொல்லத்துடிக்கும் இராவணன்... ஆதி குணசேகரனுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!

25
போலீசில் புகார் அளிக்கும் சிந்தாமணி

மறுபுறம் சிந்தாமணியும், அவரது கணவரும் முத்து, மீனா மீது போலீசில் புகார் கொடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் மகளை கடத்தியதால் அவர்களை அரெஸ்ட் பண்ணுமாறு போலீசிடம் கூறி, மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை காட்டி, அது முத்து - மீனா தான் என்று சொல்லி, அவர்களை கைது செய்ய சொல்கிறார் சிந்தாமணி. அவர்களை கைது செய்தால் ரேகா நம்மிடம் வந்துவிடுவாள் என திட்டம்போடுகிறார் சிந்தாமணி. ஆனால் இதெல்லாம் நடக்கும் என தெரிந்து முத்து முன்கூட்டியே ஒரு பிளானை போட்டுள்ளார்.

35
கைவிரித்த போலீஸ்

முத்து ரேகாவிடம் வாக்குமூலம் வாங்கிய வீடியோ தற்போது சிந்தாமணி உள்பட அனைவருக்கும் மெசேஜில் அனுப்பப்படுகிறது. அந்த வீடியோவில், பேசியுள்ள ரேகா, நானாக விருப்பப்பட்டு தான், ஆஸ்பத்திரியில் இருந்து வந்தேன். என்னை யாரும் கடத்தவில்லை. அதையும் மீறி நீங்க யாரையாச்சும் கைது செஞ்சிங்கன்னா, கோர்ட்டில் வந்து நானே சாட்சி சொல்வேன் என பேசி இருக்கிறார். இதைப்பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர், இதுக்குமேல என்னால சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என கூறிவிடுகிறார்.

45
பழிவாங்க துடிக்கும் சிந்தாமணி

போலீஸ் கைவிரித்ததால், களத்தில் குதிக்கும் சிந்தாமணி, லீகலா தான நடவடிக்கை எடுக்க முடியாது, இல்லீகலா நடவடிக்கை எடுக்கலாம்ல, நான் பாத்துக்குறேன் என சொல்லிவிட்டு, தன்னுடைய அடியாட்களுக்கு போன் போட்டு, முத்துவையும், மீனாவையும் பாலோ பண்ண சொல்லி உத்தரவிடுகிறார். சிந்தாமணியின் இந்த சதி வேலையில் இருந்து முத்துவும், மீனாவும் எப்படி தப்பிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மறுபுறம் டைவர்ஸ் விஷயம் தொடர்பாக விஜயாவும், மனோஜும் வக்கீலை பார்க்க சென்றிருக்கிறார்கள்.

55
ரோகிணியின் சதி என்ன?

ரோகிணி செலவு செய்த 5 லட்சம் பணத்தை கொடுத்தால் டைவர்ஸ் கொடுக்கிறேன் என மனோஜிடம் சொன்னதை வக்கீலிடம் கூறுகிறார் விஜயா. அதைக்கேட்ட வக்கீல், கண்டிப்பா இதில் ஏதோ சதித்திட்டம் இருக்கு, ரோகிணி அவ்வளவு சீக்கிரமா விடுற ஆள் கிடையாது. என்ன பிளான்னு தெரியலையே என வக்கீல் யோசிக்க, உடனே விஜயா, அவளிடம் காசை கொடுத்துட்டு டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்குங்க என கூறுகிறார். இதையடுத்து வக்கீல் ரோகிணிக்கு போன் போட்டு பேசுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories