Top 10 Serial : எதிர்நீச்சலுக்கு சோலி முடிஞ்சது... TRP ரேஸில் சிங்கப்பெண்ணே சீரியலை அடிச்சு தூக்கிய சிறகடிக்க ஆசை

Published : Jun 18, 2026, 02:50 PM IST

Top 10 Tamil Serial TRP Rating : தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி உள்ள நிலையில், இந்த வாரம் டிஆர்பி ரேஸில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
This Week Top 10 Tamil Serial TRP Rating

ஒரு சீரியல் ஹிட் ஆவதும், பிளாப் ஆவதும் அதற்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் மூலம் தான் கணிக்கப்படுகிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் சீரியல் ஒளிபரப்பானாலும், அதற்கு போதுமான டிஆர்பி ரேட்டிங் கிடைக்கவில்லை என்றால் அந்த சீரியலை இழுத்து மூடிவிடுவார்கள். அப்படி சின்னத்திரை சீரியல்களின் உயிர்நாடியாக இந்த டிஆர்பி ரேட்டிங் விளங்குகிறது. இந்த டிஆர்பி ரேட்டிங் விவரம் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படும். அந்த வகையில் 2026ம் ஆண்டின் 23வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
தூக்கிவீசப்பட்ட எதிர்நீச்சல்

சன் டிவியின் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருந்து வந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், எப்போ 10 மணிக்கு மாற்றப்பட்டதோ, அப்போதிலிருந்தே அதற்கான டிஆர்பி ரேட்டிங்கும் சரியத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக 10வது இடத்திலேயே நீடித்து வந்த அந்த சீரியல், இந்த வாரம் டாப் 10-ஐ விட்டு வெளியேறி உள்ளது. கடந்த வாரம் 5.04 புள்ளிகள் உடன் 10வது இடத்தில் இருந்து எதிர்நீச்சல் சீரியல், இந்த வாரம் 5.05 புள்ளிகளுடன் 12ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இது அந்த சீரியலுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

35
டாப் 10-ல் நுழைந்த அழகே அழகு

இந்த வாரம் 10-வது இடத்தில் விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் உள்ளது. அந்த சீரியலுக்கு இந்த வாரம் 5.30 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் அன்னம் சீரியல் 9-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 8-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 5.92 புள்ளிகள் உடன் 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் 7-ம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 6.16 புள்ளிகள் உடன் 8-ம் இடத்தை பிடித்துள்ளது.

45
சரிவை சந்தித்த சிங்கப்பெண்ணே

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 7-ம் இடத்திலேயே நீடிக்கிறது. அந்த சீரியலுக்கு 6.64 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து ஆறாம் இடத்தை சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் பிடித்துள்ளது. வழக்கமாக டாப் 3-க்குள் தான் இந்த சீரியல் இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக இந்த வாரம் வெறும் 6.90 டிஆர்பி ரேட்டிங் மட்டும் பெற்று 6-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததே அதன் பின்னடைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

55
டாப் 5-ல் சிறகடிக்க ஆசை

டாப் 5-ல், ஐந்தாம் இடத்தை மருமகள் சீரியல் தக்க வைத்துள்ளது. அடுத்தபடியாக நான்காம் இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 7.01 புள்ளிகள் உடன் 4-ம் இடத்துக்கு தாவி இருக்கிறது. 7.58 புள்ளிகள் உடன் அய்யனார் துணை சீரியல் 3ம் இடத்தை தக்க வைத்து உள்ளது. அதேபோல் இரண்டாம் இடத்தில் கயல் சீரியலும், முதலிடத்தில் மூன்று முடிச்சு சீரியலும் உள்ளன. இதில் கயல் சீரியலுக்கு 7.76 புள்ளிகளும், மூன்று முடிச்சு சீரியலுக்கு 9.01 புள்ளிகளும் கிடைத்துள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories