Top 10 Tamil Serial TRP Rating : டாப் 10 தமிழ் சீரியல்கள் பட்டியலில் அய்யனார் துணை சீரியலை விட அதிக டிஆர்பி ரேட்டிங்கை வாரிசுருட்டி இருக்கிறது சின்ன மருமகள் சீரியல்.
சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வார வாரம் வெளியிடப்படும். அந்த வகையில் 2026-ம் ஆண்டின் 21வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வாரம் டாப் 10 பட்டியல் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. விஜய் டிவியில் வழக்கமாக சிறகடிக்க ஆசை அல்லது அய்யனார் துணை சீரியல்கள் தான் முன்னிலை வகிக்கும். ஆனால் இந்த வாரம் சின்ன மருமகள் சீரியல் மேற்கண்ட இரண்டு சீரியல்களையும் முந்தி சாதனை படைத்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான் 10ம் இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 5.10 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 5.11 புள்ளிகளை பெற்று இருக்கிறது. கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த சன் டிவியின் அன்னம் சீரியல், இந்த வாரம் மளமளவென சரிந்து 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 6.65 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் வெறும் 5.74 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக 8-ம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது. கடந்த வாரம் 5.81 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 5.75 புள்ளிகள் உடன் அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த வாரம் 7-ம் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. கடந்த வாரம் 6.28 புள்ளிகளை பெற்றிருந்த சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் வெறும் 5.84 புள்ளிகளை மட்டுமே பெற்று 7-ம் இடத்தில் நீடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஆறாம் இடத்தில் அய்யனார் துணை சீரியல் உள்ளது. கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 6.08 புள்ளிகள் உடன் ஆறாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல், கடந்த வாரம் 9ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் விறுவிறுவென முன்னேறி 5-ம் இடத்துக்கு தாவி உள்ளது. கடந்த வாரத்தில் 5.58 புள்ளிகளை பெற்றிருந்த சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் 6.24 புள்ளிகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் மருமகள் சீரியல் உள்ளது. கடந்த வாரம் 6.39 புள்ளிகள் உடன் 6-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 6.32 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
55
டாப் 3 சீரியல்கள் என்னென்ன?
வழக்கம்போல் சன் டிவியின் கயல், சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு ஆகிய மூன்று சீரியல்கள் தான் இந்த வாரமும் டாப் 3 இடத்தை பிடித்துள்ளன. இதில் மூன்றாம் இடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 6.99 டிஆர்பி கிடைத்துள்ளது. இதையடுத்து 7.45 புள்ளிகள் உடன் சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு மணிநேர ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் 9.72 புள்ளிகள் உடன் முதலிடத்தில் நீடிக்கிறது.