Pandian Stores 2 : குமாருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தாரா முத்துவேல்? விசாரணையில் திடீர் திருப்பம்

Published : Jun 04, 2026, 10:02 AM IST

Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முத்துவேல் தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துவிடுவாரோ என்கிற பயத்தில் அவரை கொல்ல முயற்சித்துள்ளார் குமார்.

PREV
15
Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமாரும், கதிரும் சண்டைபோட்ட போது, அவர்களை தடுக்க வந்த முத்துவேலை குமார் கீழே தள்ளியதில் அவர் தலையில் அடிபட்டு மயக்கமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கதிர் தாக்கியதில் தான் முத்துவேல் காயமடைந்ததாக கூறி குமார் பொய்யான வாக்குமூலம் கொடுத்ததால், கதிரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து முத்துவேல் கண்விழித்ததும் அவரிடமும் வாக்குமூலம் வாங்க வேண்டும் என போலீசார் முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : மீனாவிடம் இருந்து பணத்தை திருடிய கும்பல்... ஆணவத்தில் ஆடிய சிந்தாமணி ஜெயித்தாரா?

25
சக்திவேலிடம் சிக்கும் குமார்

முத்துவேல் கண்விழித்தால் தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துவிடுவார் என்கிற பயத்தில் குமார், அவரை கொலை செய்ய முடிவெடுத்து, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்குள் செல்கிறார். அப்போது அவர் சுவாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவியை அவர் முகத்தில் இருந்து குமார் அகற்ற முயற்சி செய்ய, அதை சக்திவேல் பார்த்துவிடுகிறார். உடனே உள்ளே வந்து, டேய் என்னடா செய்யுற என சக்திவேல் கேட்கும்போது குமார் பதற்றத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக வெளியே செல்கிறார்.

35
போலீசிடம் வாக்குமூலம் அளித்த முத்துவேல்

சக்திவேல் வெளியே வந்து அவரிடம் என்ன ஆச்சுடா என கேட்க, அப்போது குமார், உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லணும் என சொல்லிக் கொண்டிருக்க, அப்போது போலீசார், முத்துவேலிடம் வாக்குமூலம் வாங்க அங்கு வந்துவிடுகிறார்கள். போலீசை பார்த்ததும் குமார் அங்கிருந்து ஓடிவிடுகிறார். பின்னர் போலீஸ் உள்ளே சென்று முத்துவேலிடம் கதிர் தான் உங்களை தள்ளிவிட்டாரா என கேட்க, அதற்கு அவர், இல்லை குமார் தான் என்னை தள்ளிவிட்டான் என்கிற உண்மையை கூறிவிடுகிறார். இதைக்கேட்டு சக்திவேல் ஷாக் ஆகிறார்.

45
புகார் கொடுக்க மறுத்த முத்துவேல்

பின்னர் குமார் மீது நீங்கள் புகார் கொடுக்க விரும்புகிறீர்களா என போலீசார் முத்துவேலிடம் கேட்க, அவர் அதெல்லாம் வேண்டாம் என சொல்லிவிடுகிறார். போலீஸ் சென்றதும் அங்கு முத்துவேல் குடும்பத்தாரும், பாண்டியன் ஃபேமிலியில் இருந்து கோமதி மற்றும் ராஜியும் முத்துவேலை பார்க்க வருகிறார்கள். அப்போது அங்கு இருந்த பழனி, முத்துவேல் அண்ணனை தள்ளிவிட்டது கதிர் இல்ல குமார் தானாம் என சொன்னதும் அனைவருமே ஷாக் ஆகிறார்கள். பின்னர் கோமதி, சக்திவேலிடம் சென்று, அவசரப்பட்டு என் புள்ளைய சந்தேகப்பட்டுட்டியே அண்ணே என சொல்கிறார்.

55
குமாரை அடிவெளுத்த சக்திவேல்

மறுபுறம் முத்துவேல் வாக்குமூலம் அளித்தது பற்றி அறிந்த பாண்டியன், உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்று கதிரை வெளியே எடுத்துள்ளனர். அவர்கள் வீட்டுக்கு கதிரை அழைத்து வர, அங்கு அவரை வரவேற்க கோமதி, ராஜி, அரசி ஆகியோர் வாசலில் காத்திருக்கிறார்கள். அந்த குமாரை சும்மா விடக்கூடாது என கோமதி சொல்ல, அவன் செஞ்ச தப்புக்கு அவனே தண்டனை அனுபவிப்பான் என சொல்கிறார். சக்திவேல், குமாரை தேடி தோட்டத்துக்கு செல்கிறார். அங்கு குமார் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து அவரை அடிவெளுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories