
அழகே அழகு சீரியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி திருப்பங்களால் கதை சூடுபிடித்துள்ளது. சுருதியின் திருமண விவகாரம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்த, மறுபுறம் மலரின் அம்மாவுக்கு ஏற்பட்ட காயம் குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பொறுமையை இழந்த மலர், சுரேஷ் மற்றும் தங்கராஜ் தன் அம்மாவிடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோபமுடன் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அழகே அழகு சீரியலில் சுரேஷின் தங்கையான சுருதிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். ஆனால் சுருதிக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை. காரணம், அவள் மலரின் தம்பி கார்த்தியை காதலித்து வருகிறார்.
இதனால் பெண் பார்க்கும் நாளில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறும் சுருதி, நேராக மலரின் வீட்டிற்கு செல்கிறார். இதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை அழைத்து வருமாறு கேட்க, சுருதி வீட்டில் இல்லை என்பது தெரியவருகிறது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
சூழலை சமாளிக்க முயலும் சுருதியின் அக்கா கணவர் தங்கராஜ், சுருதி கோச்சிங் சென்டருக்கு தேர்வு எழுதச் சென்றிருப்பதாகக் கூறி மாப்பிள்ளை வீட்டாரை வேறு ஒரு நாள் வருமாறு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையில் ஆனால் சுருதி உண்மையில் எங்கு சென்றிருக்கிறார் என்பது மலருக்கு தெரியவருகிறது. மலர் யாரிடமும் உண்மையை சொல்லாமல், சுருதி அவள் தோழி வீட்டில் இருக்கிறாள். நான் போய் அவளை கூட்டிட்டு வருகிறேன் என சொல்லி சுருதியை அழைத்து வருவதற்காக மலர் தனது வீட்டிற்கு சென்றார்.
மலர் சுருதியை அழைத்து வருவதற்காக செல்வதை கவனிக்கும் தங்கராஜும் சுரேஷும் சந்தேகமடைந்து மலரை பின்தொடர்ந்தனர். அப்போது மலர், அவள் அம்மா வீட்டிற்கு செல்வதை கண்டுபிடித்த தங்கராஜ், கோபத்துடன் மலர் வீட்டிற்குள் சென்றார். அவரை கண்டதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
சுருதி மலரின் வீட்டிற்கு வந்ததற்கு மலரின் தம்பி கார்த்திதான் காரணம் என்று தங்கராஜ் நினைக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கார்த்தியை அடிக்க கை ஓங்குகிறார். அப்போது குறுக்கிடும் மலரின் அம்மா, “சும்மா சும்மா என் புள்ளையை அடிக்கிற வேலையை வைத்துக்கொள்ளாதீங்க. சுருதி எங்கள் வீட்டிற்கு வந்ததற்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறினார்.
ஆனால் தங்கராஜின் கோபம் குறையவில்லை. ஒழுங்கா நகர்ந்து போய்டுங்க. வயசானவங்க, பெண்களையெல்லாம் நான் பார்க்க மாட்டேன் என்று அவர் எச்சரிக்கிறார். இதைக் கேட்டு கோபமடையும் மலர், என்ன பண்ணுவீங்க? என் அம்மாவை என்ன பண்ணுவீங்க? என்று ஆவேசமாக கேட்கிறார். இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்தது.
யாருடைய பேச்சையும் கேட்காத தங்கராஜ், சுருதி வீட்டிற்கு வந்ததற்கு கார்த்திதான் காரணம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி அவரை அடிக்கிறார். இந்த நேரத்தில் தடுக்க வந்த மலரின் அம்மாவை தங்கராஜ் தள்ளிவிடுகிறார். இதில் மலரின் அம்மாவுக்கு காயம் ஏற்படுகிறது. தொடர்ந்து சுரேஷும் கார்த்தியை அடிக்கிறார். இந்த சம்பவம் மலரை மிகுந்த அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியது.
இதற்கிடையில் சுருதியை அழைத்துக்கொண்டு தங்கராஜ் மற்றும் சுரேஷ் வீட்டிற்கு திரும்பபினார். அங்கு சுருதியின் அப்பா கடும் கோபத்தில் சுருதியை திட்டினார். அவரது அம்மா மலர் வீட்டிற்கு ஏன் சென்றாய் என சுருதியை அடித்தனர்.
எல்லாரையும் அவமானப்படுத்திவிட்டாய் என சொல்லி இனி அந்த வீட்டிற்கு போகமாட்டேன் என உங்க அப்பா கையில் சத்தியம் செய்துவிட்டு உள்ளே போக சொல்லி தங்கராஜ் கூறினார். இதனால் சுருதி தனது அப்பா கையில் சத்தியம் செய்தார்.
ஆனால் இப்போது கதை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், மலரின் அம்மாவை தங்கராஜ் தள்ளிவிட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டதை அறிந்த மலர், கடும் கோபத்துடன் சுரேஷிடம் செல்கிறார்.
அங்கு சுரேசிடன், என் அம்மாவை தள்ளிவிட்டதற்கு நீயும், உன் மாமவும் எங்க வீட்டிற்கு வந்த என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கனும் என்ற கோபமாக கூறுகிறார்.
இதனால் சுரேஷ் என்ன செய்யப் போகிறார்? தங்கராஜின் செயலுக்கு அவர் மலரின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்பாரா? அல்லது தங்கராஜுக்கு ஆதரவாக நிற்பாரா? என்ன நடக்கும்.
சுருதியின் திருமண விவகாரம், மறுபுறம் மலரின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை என அழகே அழகு சீரியல் அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களை நோக்கி நகர்கிறது.
மலர் தனது அம்மாவுக்காக எடுக்கும் அடுத்த முடிவு என்ன? சுரேஷ் மலர் இடையே மீண்டும் பிரச்சனை வெடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.