Siragadikka Aasai : விஜயாவை டார்ச்சர் பண்ணும் பாட்டி... அண்ணாமலையின் உத்தரவால் வீட்டை விட்டு வெளியேறும் முத்து - மீனா

Published : Oct 01, 2026, 07:43 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு வெளியேற சொல்லி இருக்கிறார் அண்ணாமலை. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலையின் அம்மா நாச்சியார், விஜயாவிடம் வேலைவாங்க முடிவு செய்கிறார். இன்று ஒரு நாள் விஜயா தான் சமைக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார். இதைக்கேட்டு விஜயா ஷாக் ஆனாலும், அருகில் இருந்த முத்துவும், அம்மா சமைக்க தேவையான பொருட்களை எல்லாம் நான் வாங்கிட்டு வர்றேன் என சொல்லிவிட்டு வெளியே கிளம்புகிறார். விஜயாவிடம் தனக்கு வெஜிடபுள் பிரியாணி செஞ்சு தருமாறு கேட்கிறார் நாச்சியார். விஜயா சமைப்பதில் இருந்து எஸ்கேப் ஆகப்பார்த்தாலும் பாட்டி விடுவதாக இல்லை.

சிறகடிக்க ஆசை vs பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 : ஜெராக்ஸ் எடுத்ததுபோல் ரெண்டு சீரியலுக்கும் இவ்ளோ ஒற்றுமையா?

25
விஜயாவை சமைக்க சொல்லும் பாட்டி

விஜயா எப்படி சமைக்கப்போகிறாள் என்பதை நான் அருகில் இருந்து பார்க்கப் போகிறேன் என சொல்லிவிட்டு கிச்சன் அருகே சேரை போட்டு உட்கார்ந்துவிடுகிறார் நாச்சியார். விஜயாவுக்கு உதவுவதாக வந்த மீனாவையும் நீ எந்த உதவியும் செய்யக் கூடாது என சொல்லி அனுப்பிவிடுகிறார் நாச்சியார். பின்னர் விஜயா சமையல் வேலையை தொடங்க, கொஞ்ச நேரத்தில் பாட்டி, சேரிலேயே உட்கார்ந்தபடி தூங்கிவிடுகிறார். அந்த கேப்பில் விஜயாவுக்கு உதவி செய்யலாம் என மீனா வர, சட்டென பாட்டி விழித்துக் கொள்கிறார்.

35
எஸ்கேப் ஆகும் விஜயா

நீ இங்க என்ன பண்ற என மீனாவை பார்த்து பாட்டி கேட்க, உடனே அவர் உங்களுக்கு தண்ணி கொடுக்க வந்தேன் என சொல்லி சமாளிக்கிறார். இதையடுத்து ஸ்ருதியிடம் சொல்லி, பாட்டியை ரூமுக்கு அழைத்து செல்லுமாறு மீனா சொல்ல, ஸ்ருதியும் பாட்டியிடம் நைசாக பேசி அவரை ரூமுக்குள் அழைத்துச் செல்கிறார். இதையடுத்து நிம்மதி பெருமூச்சு விடும் விஜயா, எல்லா வேலையையும் மீனா தலையில் கட்டிவிட்டு, ரூமுக்குள் சென்றுவிடுகிறார். அப்போது ஹாலில் அமர்ந்திருந்த ரோகிணியை திட்டிவிட்டு செல்கிறார் விஜயா.

45
முத்துவை திட்டும் சத்யா

மறுபுறம் மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க சென்றிருந்த முத்து, திரும்பி வரும் வழியில் ஒரு குடிகாரன் ரோட்டை கிராஸ் பண்ண முடியாமல் தள்ளாடுவதை பார்க்கிறார். அவரை கைதாங்கலாக அழைத்துச் சென்று ரோட்டிற்கு மறுபுறம் விடுகிறார். அந்த குடிகாரன் தள்ளாடி முத்து மீது விழ, அவரோ ஒரு காரின் மீது விழுகிறார். அந்த காரில் இருந்து இறங்கும் சத்யா, தண்ணி அடிச்சுட்டு ஓரமா போக மாட்டியா, நீ சாகுறதுக்கு என்னோட கார் தான் கிடைச்சதா என ஜாடைமாடையாக முத்துவை திட்டிவிட்டு, அங்கிருந்து கிளம்புகிறார்.

55
அண்ணாமலை எடுத்த முடிவு

இதையடுத்து வீட்டுக்கு வரும் முத்து, மீனாவிடம் சத்யா செய்ததை சொல்லி ஃபீல் பண்ணுகிறார். அப்போது முத்துவையும் மீனாவையும் அழைத்து பேசும் அண்ணாமலை. தான் பாட்டியை கூட்டிக்கொண்டு அவங்க ஊருக்கே போகப்போறேன். இங்க இருந்த விஜயா, அவங்க குடுக்குற டார்ச்சர் தாங்க முடியாம, அவங்களுக்கு ஞாபக மறதி இருப்பதை உளறிவிடுவாள். அதனால் நான் ஊருக்கு போறேன். நீங்களும் சத்யா பிரச்சனையை மறக்க சில நாட்கள் என்னுடன் வந்து ஊரில் தங்கி இருங்கள் என சொல்கிறார். முத்துவும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

OTT Releases : சர்தார் 2 முதல் லவ் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories