Siragadikka Aasai Salary : முத்து vs மீனா... அதிக சம்பளம் யாருக்கு? சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ

Published : Oct 03, 2026, 01:02 PM IST

Siragadikka Aasai Serial Actors Salary : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Actors Salary

சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் சேனல்களில் விஜய் டிவிக்கும் முக்கிய இடம் உண்டு. புதுப்புது நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் விஜய் டிவி, சீரியல் பிரிவிலும் பல வெற்றிகரமான தொடர்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றிருக்கும் தொடர்களில் ஒன்று ‘சிறகடிக்க ஆசை’. குடும்ப உறவுகள், கருத்து வேறுபாடுகள், காதல், மோதல்கள் என அடுத்தடுத்து திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இந்தத் தொடர், சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Siragadikka Aasai : விஜயாவை டார்ச்சர் பண்ணும் பாட்டி... அண்ணாமலையின் உத்தரவால் வீட்டை விட்டு வெளியேறும் முத்து - மீனா

24
சக்கைபோடு போடும் சிறகடிக்க ஆசை

‘சிறகடிக்க ஆசை’ தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சல்மா அருண், அணிலா, சுந்தர்ராஜன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி ரசிகர்கள் இருப்பதால், சீரியலின் கதைக்களத்தில் இவர்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரில் நடித்து வரும் நடிகர்கள் ஒரு நாளுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

34
சிறகடிக்க ஆசை நட்சத்திரங்களின் சம்பளம்

தொடரில் ரவி மற்றும் ஸ்ருதி கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்களுக்கு ஒரு நாளுக்கு சுமார் ரூ.12,000 சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ரசிகர்களிடம் தொடர்ந்து பேசப்படும் மனோஜ் மற்றும் ரோகிணி கதாபாத்திரங்களில் ரோகிணிக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.16,000 சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மனோஜுக்கு ரூ.14 ஆயிரம் வழங்கப்படுகிறதாம். குடும்பத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கும் விஜயா மற்றும் அண்ணாமலை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் தான் அணிலா மற்றும் சுந்தர்ராஜன். இதில் அணிலாவுக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.22,000 வரை சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுந்தர்ராஜனுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறதாம்.

44
அதிக சம்பளம் யாருக்கு?

இவர்களை விட தொடரின் முக்கிய கதாபாத்திரங்களான முத்து மற்றும் மீனா ஆகியோருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இருவர்களில் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்துக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.28,000 வரை சம்பளம் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஹீரோயின் கோமதி பிரியாவுக்கு ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம்.

இதுதவிர சீதா கேரக்டரில் நடிப்பவருக்கு ரூ.10 ஆயிரம், சத்யாவாக நடிப்பவருக்கு ரூ.12 ஆயிரம், ரேகாவுக்கு ரூ.10 ஆயிரம், செல்வத்துக்கு ரூ.7 ஆயிரம், கனகாவுக்கு ரூ.8 ஆயிரம், அருணுக்கு ரூ.8 ஆயிரம், சிறுவன் கிரிஷுக்கு ரூ.4 ஆயிரம், சிந்தாமணிக்கு ரூ.14 ஆயிரம், மீனாவின் அம்மா சந்திராவாக நடிப்பவருக்கு ரூ.14 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

Siragadikka Aasai : ரோகிணி வீட்டுக்குள் வந்ததும் வெடித்த பூகம்பம்... மனோஜுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்!

Read more Photos on
click me!

Recommended Stories