எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனின் கல்யாணம் முடியும் முன்னரே, திருமண மண்டபத்தில் ஒரு மர்டர் நடந்துள்ளது. அதன் பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனின் திருமணத்தை காலை 4 மணிக்கே நடத்த முடிவெடுத்த ஆதி குணசேகரன், தர்ஷனுக்கு மேக்கப் போட ஆயிஷா கெட் அப்பில் இருக்கும் நந்தினியை உடனடியாக மண்டபத்தில் இருந்து வெளியேறச் சொல்கிறார். இதையடுத்து அங்கிருந்து செல்லும் நந்தினியை, தனியே சந்திக்கும் முல்லை, உங்களுக்கு நான் ரூம் ஏற்பாடு செய்து தருகிறேன். நீங்க இங்கேயே இருங்க என சொல்கிறார். நந்தினியும் மண்டபத்தை விட்டு வெளியேறாமல், அங்கேயே குணசேகரன் கண்ணில் படாமல், ஒளிந்துகொள்கிறார். தர்ஷன் திருமணம் காலை 4 மணிக்கு நடக்க இருக்கும் விஷயம் ஜனனிக்கும் தெரியாமல் இருக்கிறது. இதன் பின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
24
அறிவுக்கரசி போட்ட ஸ்கெட்ச்
ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கியதற்கான வீடியோ ஆதாரத்தை அறிவுக்கரசியிடம் இருந்து அபேஸ் பண்ணிய கேமராமேன், அவரிடம் ரூ.1 கோடி கேட்டு பிளாக்மெயில் செய்து வந்தார். தர்ஷன், அன்புக்கரசி கழுத்தில் தாலி கட்டுவதற்குள் ஒரு கோடி என் கைக்கு வந்தாகனும் என மிரட்டி இருந்தார். இதனால் அறிவுக்கரசியும் வேறு வழியின்றி, 1 கோடியை கொடுக்க சம்மதிக்கிறார். பேசிய டீல் படி கேமராமேனிடம் ஒரு கோடி பணத்தை கொடுக்க தன்னுடைய அடியாட்களையும் வரவைத்த அறிவுக்கரசி, பாத்ரூம் ஏரியாவிற்கு கேமராமேனை வரச் சொல்லி அங்கு அவனிடம் பணத்தை கொடுப்பதாக அழைக்கிறார்.
34
கேமராமேனை கதம் பண்ணிய அறிவு
அங்கு பணத்தை வாங்க வந்த கேமராமேன், ஒரு கோடி ரூபாய் பணத்தை பார்த்ததும், வாவ் என வாயைப்பிழக்கிறார். உனக்கு இதெல்லாம் சாதாரணம் அக்கா, நீ எவ்வளவு பெரிய ஆளு, சரி காச கொடு என பணத்தை வாங்க வர, அவனை தடுக்கும் அறிவுக்கரசி, முதலில் வீடியோ ஆதாரத்தை கொடு என கேட்கிறார். அதற்கு அவர், இந்த கையில பணம், இந்த கையில பென் டிரைவ் தருகிறேன் என சொல்கிறார். இதையடுத்து பணத்தை கொடுத்துவிட்டு பென் டிரைவை வாங்கும் அறிவு, தன்னுடைய அடியாளிடம் இருந்து கத்தியை வாங்கி, கேமராமேனை சரமாரியாக குத்திக் கொன்றுவிடுகிறார்.
மறுபுறம் குணசேகரன், ஜனனி இருக்கும் இடத்தை சுத்து போட்டுள்ள ரெளடிகளுக்கு போன் போட்டு, மூணு உசுருல ஒன்னு கூட மிஞ்சக் கூடாது. எல்லாத்தையும் கொன்றுவிடு என உத்தரவிடுகிறார். பின்னர் தங்களை தாக்க வந்த ரெளடிகளை அடிச்சு துவம்சம் செய்யும் ஜனனி, இதுக்கப்புறம் இங்க இருக்க வேண்டாம் கிளம்பலாம் என முடிவெடுத்து, பார்கவி மற்றும் ஜீவானந்தத்தை அழைத்துக் கொண்டு அந்த ஏரியாவில் இருந்து எஸ்கேப் ஆகிறார். இதன் பின்னர் என்ன ஆனது? ஜனனி ரெளடி கும்பலிடம், இருந்து தப்பித்தாரா? குணசேகரன் நினைத்தபடி தர்ஷன் திருமணம் நடந்ததா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.