Meena getting angry with her Father Janardhanan : நான் மாமனார் வீட்டிலேயே சந்தோஷமாக இருக்கும் போது ஏன் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்றும் எனக்கு அரசு குடியிருப்பு வேண்டாம் என்றும் மீனா தனது அப்பாவிடம் கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவிற்கு (Govt Quarters) அரசு குடியிருப்பு கொடுக்கும் போது அதனை மீனா வேண்டாம் என்று சொல்ல நினைப்பதாக தனது கணவர் செந்திலிடம் கூறினார். அதற்கு செந்திலோ அப்படியே வாங்கிக் கொள். நாம் அங்கு சென்றுவிடலாம் என்று சொல்ல, மீனாவோ அதெல்லாம் வேண்டாம் என்றார். பதிலுக்கு நமக்கு தேவையில்லை என்றாலும் கூட பழனி மாமா அங்கு செல்வார் என்றார். அப்படி அவர்கள் செல்லவில்லை என்றால் நாம் போகலாம். நமக்கு கொஞ்சம் பிரைவேசி வேண்டும்.
வாரத்திற்கு ஓரிரு நாட்கள் அங்கிருந்து வேலைக்கு செல்லலாம் என்றார். ஆனால், மீனா கேட்பதாக தெரியவில்லை. வேறு, வழியில்லாமல் மீனா யார் சொன்னா கேட்பாளோ அங்கு வந்து அவர்களிடம் இதைப் பற்றி சொன்னார். மீனாவின் அப்பாவோ இதைப் பற்றி மீனாவிடம் கேட்பதாக கூறினார். யாராக இருந்தாலும் தன்னுடைய பொண்ணு சந்தோஷமாக மாப்பிள்ளையுடன் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், இங்கு என்னடானா, மாப்பிள்ளையே தனிக்குடித்தனம் போகலாம் என்று கேட்க அதற்கு முடியாது என்கிறாரே என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய 595ஆவது எபிசோடு
இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 595ஆவது எபிசோடில் இதைப் பற்றி பேசுவதற்கு மீனா வேலை பார்க்கும் குன்றக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்தார். அவர், உனக்கு அரசு குடியிருப்பு கொடுக்கும் போது ஏன் அதை வேண்டாம் என்று சொல்ற, அவர்கள் கொடுக்கும் போது வாங்கிக் கொண்டு நீயும் மாப்பிள்ளையும் சந்தோஷமாக அங்கு போய் இருக்கலாம். மாப்பிள்ளையே சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்படியிருக்கும் போது நீ ஏன் வேண்டாம் என்று சொல்ற என்று கேட்டார்.
45
மீனா மற்றும் செந்தில்
அதற்கு நான் இப்போதே என்னுடைய புகுந்த வீட்டில் சந்தோஷமாகத்தான் வாழ்கிறேன். அப்படி இருக்கும் போது எதற்கு அரசு குடியிருப்புக்கு செல்ல வேண்டும். என்னுடைய முடிவை நான் தான் எடுக்க வேண்டும். என்னுடைய வீட்டுக்காரருக்கு விருப்பம் என்றால் அவர் தனிக்குடித்தனம் செல்லட்டும் என்றார். என்னுடைய மாமனார், மாமியார் வீட்டில் நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். என்னுடைய வீட்டு ஆட்களை வாரம் முழுவதும் பார்க்க வேண்டுமா அல்லது வார கடைசி நாட்களில் பார்க்க வேண்டுமா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இதைப் பற்றி மேலும் பேச வேண்டாம்.
55
அரசு குடியிருப்பு வேண்டாம்
அப்படி பேசினால் உங்களுக்கும் எனக்கும் தான் வாக்குவாதம் வரும் என்றார். இதைத் தொடர்ந்து மீனாவின் அப்பா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். உடனே மீனா செந்திலுக்கு போன் போட்டு திட்ட ஆரம்பித்துவிட்டார். நீங்கள் ஏன் என்னுடைய அப்பாவிடம் போய் சொன்னீங்க, உங்களுக்கு அறிவு இல்லையா? இப்போதான் என்னுடைய அப்பா வந்து பேசிட்டு போனார். ஒரு விசயம் நான் வேண்டாம் என்று சொன்னால் விடமாட்டீங்களா, அடுத்து யாரிடம் போய் பேச போறீங்க? அரசு குடியிருப்பு விஷயத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன். இனிமேல் நீங்கள் இதைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இனி அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.