பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடையில் கைவரிசை காட்டிய மாணிக்கம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணனின் மாமனார் பாண்டியனின் கடைக்கு வேலைக்கு வருவதாக கூறியிருந்தார். இது சரவணனுக்கு பிடிக்காத நிலையில் தங்கமயிலிடம் கூறினார். உன்னுடைய அப்பாவிடம் சொல்லி கடைக்கு வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிடு என்று கூறியிருந்தார். அதன்படி தனது அம்மாவிடம் சென்று இதைப் பற்றி பேச சென்றார். ஆனால், அங்கிருந்த சூழலைப் பார்த்து அவர் அதைப் பற்றி சொல்லவில்லை.
அதற்கு பதிலாக உன்னுடைய அப்பாவிற்கு இப்போது தான் ஞானம் பிறந்திருக்கிறது. அவர் உன்னுடைய மாமனாரிடம் பேசி எப்படியோ வேலைக்கு வருவதாக கூறினார் என்றார். அவர் வேலைக்கு சென்றுவிட்டால் நான் கடனை அடைத்துவிடுவேன் என்றார். இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 596ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய காட்சியில் தங்கமயிலின் அப்பா மாணிக்கம் முதல் நாளாக கடைக்கு வேலைக்கு சென்றார்.
வேலைக்கு சென்ற இடத்தில் தனது சம்பந்தி கடை என்ற உரிமையிலும், தான் இதுவரையில் எந்த வேலையும் செய்ததில்லை என்ற தெனாவட்டிலும் அவர் பாட்டுக்கு ஹாயா டூருக்கு வந்த மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் சுற்றி வந்தார். கடையில் விற்பனைக்கு இருந்த கூல்டிரிங்ஸ் எடுத்து குடித்தார். பிறகு வயிறு பசிக்கிறது என்று வேர்க்கடலை எடுத்து சாப்பிட்டார். பழனிவேலுவிடம் சென்று டீ வாங்கி வரச் சொன்னார். பாண்டியன் உட்காரும் சேரில் உட்கார்ந்தார்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தானாக சென்று பேசினார். உறவினர்களுக்கு தள்ளுபடி கொடுத்தார். இப்படி ஒரே நாளில் சரவணனுக்கும் சரி பழனிவேலுவிற்கும் சரி கோபத்தையும், வெறுப்பையும் உண்டாக்கினார். வேலைக்கு மாணிக்கம் வந்த நிலையில் பாண்டியன் கடையில் வேலை செய்தார். இதைப் பார்த்த சரவணன், அதான் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறீர்களே அப்பா, பிறகு ஏன் நீங்கள் வேலை பார்க்குறீர்கள் என்றார்.
57
பாண்டியன் சேரில் உட்கார்ந்த மாணிக்கம்
பாண்டியன் வெளியில் சென்ற போது தானும் வருவதாக கூறினார். கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைப் பார்த்து இவ்வளவு பணமா ஆற்றுத்தண்ணீரை கொஞ்சமாக குடித்தால் என்ன தெரியவா போகிறது என்று ரூ.500 எடுத்து தனது பையில் போட்டுக் கொண்டார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
67
வரவு செலவு கணக்கு பார்க்கும் பாண்டியன்
ஆனால், பாண்டியன் வரவு செலவை எளிதி வைத்து வீட்டிற்கு சென்று தனது மகள் மற்றும் மகன்களிடம் சொல்லி அன்றைய நாளுக்கான கணக்கு பார்ப்பது வழக்கம். இந்த சூழலில் மாணிக்கம் கடையிலிருந்து ரூ.500 எடுத்த சூழலில் அதைப் பற்றி பாண்டியன் விசாரிக்க நேரிடும். அப்படி விசாரிக்கும் பட்சத்தில் புதிதாக வேலைக்கு வந்த மாணிக்கம் தான் என்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தெரிய வரும் போது என்ன நடக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. ஆனால், அதற்கு ஒரு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
77
கடையில் வேலைக்கு சேர்ந்த மாணிக்கம்
மாணிக்கம் கடையில் வேலை பார்ப்பது பற்றி சரவணன் தனது மனைவி தங்கமயிலிடம் பேசுவார். அதோடு பாண்டியனிடமும் பேசுவார் என்று தெரிகிறது. மேலும், அவர்களுக்கு இடையில் சண்டை வரலாம். இப்போது கடையில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. அப்படி தெரிய வரும் போது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.