இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை இலவசமாக கண்டு மகிழலாம்..! JioCinema-ன் அசத்தல் அறிவிப்பு..

First Published Jun 18, 2023, 8:10 AM IST

பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி ஜியோசினிமா  இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.

ஜியோசினிமா தற்போது பிக் பாஸ் OTT சீசன் 2 இன் 24x7 பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. FIFA உலகக் கோப்பை 2022 மற்றும் IPL 2023 ஆகியவற்றின் போது அதிக விளையாட்டு பார்வையாளர்களின் சாதனைகளைப் படைத்த பிறகு, OTT ஸ்ட்ரீமிங் தளம் சமீபத்தில் அறிவித்தது.

இது பிரபலங்களின் ரியாலிட்டி ஷோவின் நேரடி ஸ்ட்ரீமிங்கை பார்வையாளர்களுக்கு காண்பிக்கும். லைவ் ஸ்ட்ரீமிங்குடன், பிரபலங்களின் ரியாலிட்டி ஷோவின் பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்களை ஜியோ சினிமா வழங்குகிறது. பிக் பாஸ் OTT 2 இன் நேரடி ஸ்ட்ரீமிங்கில் பல்வேறு அம்சங்களை சேர்த்துள்ளது ஜியோ சினிமா.

கூடுதலாக, JioCinema மல்டி-கேமரா ஸ்ட்ரீமிங்குடன் ஒரு அதிவேக OTT அனுபவத்தை வழங்கும். அதாவது ஜியோசினிமாவின் லைவ் ஸ்ட்ரீமிங் பார்வையாளர்களுக்கு வீட்டிற்குள் 360 டிகிரி கேமரா காட்சியை வழங்கும். அதனுடன் 1000 மணிநேர நேரலை காட்சிகளும் இடம்பெறும். உங்கள் மொபைலில் ஜியோ சினிமா இலவச ஸ்ட்ரீமிங்கை பார்ப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

முதலில் ஜியோ சினிமா ஆப்பை உண்கலத்தி மொபைலில் பதிவிறக்கம் செய்யவும். உள்ளே நுழைந்து தேடல் பட்டியில் "Bigg Boss OTT 2" என்று தேடவும். நீங்கள் பார்க்க விரும்பும் எபிசோடைத் தேர்ந்தெடுத்து, பிளேயை அழுத்தவும். 24/7 நேரலை ஸ்ட்ரீமிங்கைப் பார்க்க, பிக் பாஸ் OTT 2 பேனரை நேரடியாகத் தட்டவும்.

ஜியோ சினிமாவின் இணையதளத்தில் பிக் பாஸ் OTT 2-ஐயும் பார்க்கலாம். இதுமட்டுமின்றி ஜியோ வரம்பற்ற டேட்டாவை விரும்பும் பயனர்களுக்கு தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீமிங் செய்ய பலவிதமான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க

click me!